நல்லிணக்கத்தின் சின்னம் சிவனொளி பாத மலை

2019-07-21 18:23:55

(செ.தி.பெருமாள்)
இலங்கை வரலாற்றில் தடம் பதித்த உலக புகழ் பெற்ற, இயற்கையின் சின்னமாக விளங்குவது சிவனடிபாதமலையாகும். இம்மலையானது சுமார் 2,243 மீ,7359 அடி உயரமும் ஆகும். இம்மலையின் முக்கியத்துவம் இலங்கைவாழ் பௌத்த, இந்து, இஸ்லாமிய, ,கிறிஸ்தவ மக்கள் அனைவரும் சமத்துவமாக இணைந்து வழிபடுவதே ஆகும்.
பௌத்;த மதத்தினர் புத்தரின் பாதம் எனவும்,இந்துக்கள் சிவனுடையபாதம் என்றும், கிறிஸ்தவர்கள், ஆதாமின்பாதம் என்றும்; இஸ்லாமியர்கள் அல்லாவின் பாதம் என்றும் இம்மலையினை வணங்குகின்றனர்.


கேரள யாத்திரிகர் வருகை
200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய கேரள பகுதியைச் சேர்ந்த மலையாள மக்கள் அதிகளவு சிவனடிபாதமலைக்கு கட்டுமரங்கள் மூலம் கடல் பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்து, மன்னார் முதல் நடைப்பயணமாக ஆங்காங்கே தங்கி சிவனடிபாத மலைக்கு சென்று வணங்கியுள்ளனர்.
அவ்வாறான காலப்பகுதியில் அவர்கள் தங்குவதற்கு அம்பலங்கள் அமைத்து கொண்டு பாரிய மலை உச்சிக்கு சென்று வருவது மிகவும் கடினமாக அப்போது இருந்தமை குறிப்பிடதக்கது.  படிகள் இல்லை ஆகையால் வெகு கஸ்டத்திற்கு மத்தியில் அவர்கள் மலைக்கு சென்று பாதத்தை வணங்கிவந்துள்ளனர்.
;அக்காலப்பகுதியில் அவர்களினால் வழங்கப்பட்ட பாரிய குத்து விளக்கு ஒன்று மஸ்கெலியா ஸ்ரீ சண்முக நாதர் சுவாமி தேவஸ்தானத்தில் தற்போதும் உள்ளது.


சிவனொலிபாதமலை க்கான பட முடிவு

மஸ்கெலியா நகர் 1969 க்கு முன்னர் மவுசாகலை நீர் தேக்கத்தில் மூழ்கடிக்கபட்டது. அந்த நகரில் இருந்த பௌத்த விகாரை இந்து ஆலயம், பள்ளிவாசல், கத்தோலிக்க தேவாலயத்தில் சிவனடிபாதமலைக்கு வரும் யாத்திரிகள் தங்கிச் செல்வதுண்டு. இனம், மதம், மொழி, பாகுபாடில்லாமல் சகலரும் ஒன்றிணைந்து அந்த ஆலங்களில் தங்கி உணவு சமைத்து சாப்பிட்டு செல்வர.
அதன்பின்னர் மஸ்கெலிய நகரம் நீரில் மூழ்கடிக்கபட்டதால் பக்தர்கள் வருவது குறைந்து விட்டது.
இருந்தபோதும் நல்லதண்ணி நகரில் பௌத்தர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் ஆரம்பமாகும் இந்த சிவனடிபாதமலை பருவகால யாத்திரை, தொடர்ந்து 6 மாதங்களுக்கு இடம்பெறும் வைகாசி விசாக பௌர்ணமி தினத்துடன் நிறைவுபெறும்.
இந்த மாத காலத்தில் ஒவ்வொரு வருடமும் ஆரம்பத்தில் ஒவ்வொரு பௌத்த இந்துக்கள் சிவனடிபாதமலைக்கு சென்று தரிசிப்பதும் கடைசி தினமான வைகாசி விசாக பௌர்ணமி தினத்தில் அதிகளவான இந்துக்கள் தங்களுக்கு 6 மாத பருவகாலத்தில் சிவன் அருளால் அதிகளவு பணம் கிடைத்ததையொட்டி  சமன் தெய்வ வழிபாட்டிற்கு பூஜை பொருட்கள் அனைத்தையும் கொண்டு சென்று வழிபட்டு திருப்தியடைவர.

சிவனொலிபாதமலை க்கான பட முடிவு


மேலும் வாராந்தம் இலங்கையில உள்ள தன வந்தர்களால் மலை உச்சி பகுதியில் வணங்க செல்லும் அனைவருக்கும் தாமரை பூ இலவசமாக தானம் வழங்கள மற்றும் உணவுகள் என்பன தானமாக வழங்கபடுகின்றன. இதில் பௌத்தர்கள் இந்துக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுவார்கள்.
அத்தோடு இவ்வாறான தானத்தினை ;சகல மதத்தினரும் ஏற்றக்கொள்வார்கள்.
மேலும் மலை உச்சியில் இருந்து நல்லதண்ணி நகருக்கு, மலையின் சமன் தெய்வத்தின் காணிக்கைகளை பெருமளவில் 51 கிலோ எடையில் கட்டப்பட்டு வாரத்திற்கு ஒருதடவை இந்துக்கள் கொண்டுவந்து தறுவது மிகவும் சிறப்பான காரியமாகும்.
காரணம் பெருந்தோட்டங்களில்  பணிப்புரியும் ஒரு தொழிலாளிக்கு 50 கிலோ எடையுள்ள உணவை சுமந்து செல்ல நாள் வேதனமாக 2000 ரூபா வழங்கப்படுகின்றது.


மியன்மார் பிக்குகள்
மியன்மாரில் இருந்து பெருந்தொகையான பௌத்தபிக்குகள் கொழும்பு விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து நடைபவணியாக சிவனடிபாதமலைக்கு செல்வர். இவர்களில் பெருந்தொகையானோர் பலவித உதவிகளை நல்குவர்.
அதிகளவு பௌத்தர்கள், இந்துக்கள் தானம் வழங்கி, முடியாதோரை அதாவது முதியோரை மலையுச்சிக்கு  தூக்கி சென்று வணங்கிய பின்னரும் கீழ் கொண்டு வந்து விடுவார்கள். இவ்வாறாhன செயல்களை இந்துக்கள் அதிகளவில் மேற்கொண்டு வருவார்கள். அதற்காக அவர்கள் ஒருதொகை பணம் வழங்குவர்
ஒவ்வொறு சிவன்ராத்திரி காலத்தில் இலங்கை, இந்தியா ஏனைய நாடுகளில் உள்ள இந்துக்கள் அதிகளவில் இந்த சிவனடிபாதமலைக்கு வந்து தரிசித்து சூரிய உதயம் பார்த்து விட்டு கீழ் இறங்கிய பின்னர் மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவஈஸ்வர ஆலத்தில் சிவனை தரிசித்து அங்குள்ள குழுக்கள் சிவ ஸ்ரீ சங்கர குருக்களிடம் ஆசி பெற்று செல்வர். இன பேதம் இன்றி அந்த குழுக்கள் ஆசி வழங்குவார். அதிகளவில் பௌத்த மக்கள் ஆசி பெறுவது குறிப்பிட தக்கது.
அனைத்து மதத்தினரும் மத பேதமின்றி அவ்விடத்தில் விபுதி தரித்து பொட்டு வைத்து கொண்டு செல்வதை காணலாம்.
இவ்வாறான செயல்கள் இங்கு இடம்பெருவதால் நாட்டின் சகல மதத்தினரும் சமமாக வந்து வழிபட்டு செல்லும்  ஒரு இடமாக சிவனடிபாதமலை விளங்குகின்றது. அத்தோடு மட்டும் அல்லாமல் வெளிநாட்டு உல்லாச பயணிகள் அதிகளவு இந்த ஆலயத்தில் வருகை தந்து வழிபடுவதோடு அவர்களின் நிதியும் வழங்கி வருகின்றனர்.
கடந்த காலங்களில் மக்கள சிவனடிபாதமலையை தர்சிக்க மிக கஸ்டபட்டு மலைக்கு ஏறினர் ஒரு பகுதியில் செங்குத்தான நிலையிலிருந்து சங்கிலியை பிடித்துக்கொண்டுதான் மலைக்குச் செல்ல வேண்டும். தற்போது காலம் மாற மாற பல வங்கிகள் பல தனவந்தர்களினால் இரானுவத்தினர்  சிவில் உடை தரித்த பொலிஸார் அதிரடிப்படையினர், விமான படையினர், கடற்படையினர்களை கொண்டு படிகட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் யாத்திரிகள் மிகவும் கஸ்டமின்றி மலைக்கு சென்று தரிசித்து வருகின்றனர்.
சிவனடிபாதமலை அடிவாரத்தில் ஜப்பான் நாட்டை சேர்ந்த பிக்குகளினால் பாரிய போதி அமைக்கப்பட்டுள்ளது.  இதற்கு முழுமையான பணத்தை ஜப்பான் நாட்டவர் செலவு செய்தனர்.
அக்கால கட்டத்தில் மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, மகாவலி அபிவிருத்தி அமைச்சர் மறைந்த காமினி திசாநாயக்க அவர்களினால் இந்த போதியும்; விகாரையும் திறந்துவைக்கபட்டது.
அப்போதைய காலகட்டத்தில்  தானம் வழங்கும் நிகழ்வகள் இடம் பெற்றது. பெரும்பாலும் இதனை பௌத்தர்கள் இந்துக்கள் வழங்கினர்.
மேலும் விகாரைகள் 2 உள்ளன. அவற்றில் அடிவாரத்தில் உள்ள ஓரு விகாராதிபதி மட்டும் வருடாந்தம் வெளிநாடுகளில் இருந்து அவரால் அழைக்கபடும் பௌத்த மத குரு பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்படுவதுடன் குளிர்காலத்தில்,அணியும் உடையும் அவர்களுக்கு; வழங்கபடுகின்றது.   
மேலும் கல்பருக்ச விகாரையில் தகாம் பாடசாலையும் அறநெறி பாடசாலையும் அமைக்கபட்டு கற்றல் நடவடிக்கை இடம் பெறுகின்றது.  

தொடர்புடைய படம்


இங்கு வந்து கல்வி கற்கும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கபடுகின்றது.  போதி அமைக்கவும் அங்கு நிரந்தர பௌத்த விகாரைகள் அமைத்து தினமும் பூஜைகள் நடக்க திட்டமிடபட்டுள்ளது.
இங்கு இந்துக்கள் அதிகளவு வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளதோடு இரு மதத்தினருக்கான விரிசல்கள் இன்றி மிகவும் அன்பும் சகோதரத்துடன் செயற்பட்டு வருகின்றனர். என்பது குறிப்பிடதக்கது