மகரஜோதி மண்டல பூஜை பெருவிழா

2019-11-15 18:33:59


(மஸ்கெலியா செ.தி. பெருமாள்)
வரலாற்று சிறப்பு மிக்க மஸ்கெலியா அருள்மிக ஸ்ரீ சண்முகநாதர் சுவாமி தேவஸ்தானத்தில் ஸ்ரீ ஐயப்ப யாத்திர சங்கம் நடாத்தும் மகர ஜோதி மண்டல பூஜை பெருவிழா சபரி மலை புனித தீர்த்த யாத்திரை கார்த்திகை மாதம் 01 நாள் 17.11.2019 ஞாயிற்று கிழமை அன்று ஆரம்பமாகி தைப்பொங்கல் வரை 06 தினங்களுக்கு மகரஜோதி மண்டல பூஜை பெருவிழா நடைபெறவுள்ளது.


17.11.2019 அன்று காலை 6.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடைதிறத்தலும் காலை 7.30 மணிக்கு மகா கணபதி ஹோமமும், காலை 8.30 மணிக்கு விக்னேஸ்வரர் அபிஷேகமும் காலை 10.00 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு விஷேட அபிஷேகமும் காலை 11.00 மணிக்கு மேல் யாத்திரீர்களுக்கான விரதமணி மாலை அணிதல் விசேட அலங்கார தீபாராதனையும் இரவு 7.00 மணிக்கு 18ம் படி பூஜை சரண கோஷ வழிபாடு விஷேட பஜனை ஹரிஹரிராசனமும் நடைபெறவிருப்பதாலும் இப்பூஜைகள் அனைத்தும் ஆலய பிரதம குரு கிரியாரத்தினம் ஆகமநிதி, ஆன்மீகச்சுடர், தேச கீர்த்தி சிவ ஸ்ரீ சி. சுpவசங்கர குருக்கள் என்பவரால் நடாத்தி வைக்கபடும் என்பதால் அனைத்து மெய்யடியார்களும் பூஜைகளில் கலந்து கொண்டு மணிகண்ட பெருமானின் திருவருளை பெற்றுய்யுமாறு ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்தனர்.