மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாதருக்கு 108 அஷ்டோஸ்திர சங்காபிஷேகம்

2019-12-09 16:16:24மஸ்கெலியா செ.தி.பெருமாள்

மஸ்கெலியா அருள்மிகு ஸ்ரீ சண்முகநாதருக்கு 108 அஷ;டோஸ்திர சங்காபிஷேகமானது இன்று 10ஆம் திகதி செவ்வாய் கிழமை மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாதர் சுவாமி தேவஸ்தானத்தில் நடைபெறவுள்ளது.

இன்று காலை 8.30 மணிக்கு விசேட அபிஷேகமும் சண்முகநாதருக்கு 108 சங்காபிஷேகமும் இரவு 7.00 மணிக்கு வசந்த மண்டப பூஜையும் ஸ்ரீ ஐயப்பன் சுவாமிக்கு 18 ம் படி பூஜையும் நடைபெற்று விநாயக பெருமான் வள்ளி தெய்வசேனா சமேதராய் ஸ்ரீ சண்முகநாதர் பெருமானும் ஸ்ரீ ஐயப்பன் பெருமானும் உள்வீதி வலம் வருதலும் சொர்க்கப்பனை கொளுத்துதலும் நடைபெற உள்ளது.