விமர்சன அரசியலில் ஈடுபட போவதில்லை இ.தொ.கா. கண்டி மாவட்ட வேட்பாளர் பரத் அருள்சாமி

2020-03-14 09:13:12

 

மக்களின் அபிவிருத்திக்கே முக்கியத்துவம் கொடுக்கவுள்ளதால்இ நான் விமர்சன அரசியலில் ஈடுபடப்போவதில்லை. கண்டி மாவட்டத்தை 90சதவீதமான வாக்குகளால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிக்கொள்ளும். அந்த வெற்றியில் நானும் பங்குதாரராவேன் என்று பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் கண்டி மாவட்ட வேட்பாளருமான பரத் அருள்சாமி தெரிவித்தார்.

கண்டி மாவட்டம் என்பது விடுபட்ட மாட்டவமாகவே உள்ளது. அந்த மாவட்டத்தில் வாழும் மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துவதற்குஇ தமிழ் பிரதிதிநித்துவம் ஒன்றும் அவசியம் என்பதால் இ.தொ.காவின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் கண்டி மாவட்டத்தில் களமிறங்கியுள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கூறிய அவர்

கண்டி மாவட்டத்தில் வாழும் பெருந்தோட்ட மக்களின் தேவைகள்இ இளைஞர் யுவதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்துவிதமான பிரச்சினைகளையும் இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதே எனது எதிர்கால இலக்கு. அதற்காக இ.தொ.கா தலைமையிலான இளைஞர் படையணி ஒன்று செயலுருவாக்கம் பெற்றுள்ளது.

கண்டி மாவட்டத்திலுள்ள எமது மக்களுக்குஇ அரசியல் ரீதியான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. நுவரெலியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள்இ ஏனைய மாவட்டங்களுக்குக் கிடைக்கின்றனவா என்பது கேள்விக்குறி.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸூக்கும் கண்டி மாவட்டத்துக்கும் இடையிலான இணைப்பில் விரிசலொன்றுக் காணப்படுகிறது. மக்களுக்கும் இ.தொ.காவுக்குமான தொடர்பாடலிலுள்ள சிக்கலே அதற்குக் காரணம்

நான்கு வருடங்களில் எமக்கிருந்த வழங்களைப் பயன்படுத்தியே கண்டி மாவட்டத்தில் அபிவிருத்திகளை மேற்கொண்டோம். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பதவியேற்றதன் பின்னர் 2 கோடி ரூபாய் பெறுமதியான உட்கட்டமைப்பு வசதிகளை கண்டி மாவட்டத்தில் முன்னெடுத்து வருகிறார்.

ஆரம்பக்கட்டமாக 500 வீடுகளைக் கட்டுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றார். இந்த வீட்டுத்திட்டங்கள்இ கண்டி மாவட்டத்தில்இ புஸ்ஸல்லாவ நாவலப்பிட்டி ,கலஹா- தெல்தொட்ட, மடுல்கல, பன்வில ஆகியப் பகுதிகளில், மலையக எழுச்சி எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

கண்டி மாவட்டத்தில், கடந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட நூற்றுக்கு தொன்னூறு சதவீதமான வீட்டுத் திட்டங்களில், வெறும் வீடுகள் மட்டுமே உள்ளன. வீடுகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளும் எவையும் செய்துகொடுக்கப்படவில்லை குறிப்பாக பாதை, மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் எவையும் செய்துகொடுக்கப்படவில்லை. வீடுகளுக்கு வழங்கப்பட்ட ஆவணங்களில், செல்லுபடியாகின்ற காணி உறுதிப்பத்திரங்கள் எவையும் வழங்கப்படவில்லை.

கண்டி மாவட்டத்தில், கடந்த அரசாங்கத்தில் தமிழர்களின் உரிமைகள் நசுக்கப்பட்டனவேத் தவிர அவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா? என்பது கேள்விக் குறி. கண்டி மாவட்ட இளைஞர்களை,சுயத்தொழில் வேலைவாய்ப்புகளுக்குள் உள்வாங்குவதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே எனது பிரதான இலக்கு அத்துடன் பெருந்தோட்டத்தில், சுகாதாரத்துறையை மேம்படுத்துவதே, தனது அடுத்த இலக்கு. பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிலையத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைவாகஇ பெருந்தோட்ட சிறுவர்களின் போஷணை மட்டத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துச் செல்கிறோம் என்றார்.