கமலஹாசன் வேண்டுகோள்

2020-03-21 23:14:27


கொரோனா வைரஸ் தொடர்பாக நடிகரும் மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோவில் கூறி இருப்பதாவது:

கூட்டம் கூடும் இடத்திற்கு போகாதீர்கள்.
அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு செல்லுங்கள்.
நான் இப்போது வந்திருப்பது கூட இதை உங்களுக்கு சொல்வதற்கு தான்.
இப்படி செய்வதன் மூலம் பிறரிடமிருந்து வைரஸ் உங்களுக்கு பரவாமலும்இ உங்களிடமிருந்து பிறருக்கு பரவாமலும் தடுக்கலாம்.

கொரோனா தொற்று இருந்தாலே உயிருக்கு ஆபத்து என்று கிடையாது.

வந்தால் செய்ய வேண்டியதை வரும் முன்பே செய்வோம்.

விலகி இருங்கள் பாதுகாப்பாக இருங்கள்.

நமக்கு ஒன்றும் வராது என கண்மூடித்தனமான நம்பிக்கையாலும் அசட்டு தைரியத்தாலும் இந்த நோய் பரவ நாம் காரணமாகி விடக்கூடாது.

முன்னெச்சரிக்கை தான் முக்கியமானது மறந்துவிடாதீர்கள்.

உடல் ஆரோக்கியம் முக்கியம்.

ஆகையால் தான் இந்த இரண்டு வாரம் மிக முக்கியமானது.

இயந்திரமா ஓடிட்டு இருந்த வாழ்க்கையில் இருந்து காலத்தின் கட்டாயத்தால் ஒரு சின்ன இடைவெளி கிடைத்திருக்கிறது. அதை சரியா பயன்படுத்துங்கள்.

வீட்டிலேயே இருங்கள். பத்திரமா இருங்கள். இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.