மனிதர்களுக்குத் தொற்றக்கூடிய புதிய வைரஸ் பன்றிகளில் கண்டுபிடிப்பு

2020-07-01 19:22:26

2011 முதல் 2018 வரை மேற்கொண்ட பன்றிகளில் உள்ள ஃப்ளூ வைரஸ் பற்றிய ஆய்வில் புதிய ஜி-4 என்கிற ஹெச்1என்1 பன்றிக்காய்ச்சல் வைரஸ் இருப்பதையும் அது மனிதர்களுக்குத் தொற்றி இன்னொரு பெருந்தொற்றாக மாறக்கூடிய கூறுகள் கொண்டிருப்பதாகவும் சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இது குறித்த உடனடியான அச்சம் எதுவும் தேவையில்லை என்றும் தொடர்ந்து நெருக்கமாகக் கண்காணிக்கிறோம் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் உலகச் சுகாதார அமைப்பும் இந்த ஆய்வின் மீது கவனம் குவித்துள்ளதாகவும் சீன ஆய்வை கவனமாக வாசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

உலகச் சுகாதார அமைப்பின் கிறிஸ்டியன் லிண்ட்மீயர் இது தொடர்பாகக் கூறிய போது

இந்த ஆய்வை ஆழமாக வாசித்து வருகிறோம். இதில் புதிதாக என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முயன்று வருகிறோம். கொரோனா காலத்தில் இருக்கிறோம் என்பதற்காக இன்ப்ளூயென்சா வைரஸ் குறித்த பாதுகாவலிலும் நாம் சோடை போக முடியாது. ஆகவே கண்காணிப்பு அவசியம்  என்று அவர் தெரிவித்தார்.

இது பன்றியிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் ணழழழெவiஉ தன்மையைக் கொண்டது என்பதாலும் சீனாவில் அடர்த்தியாக மக்கள் வசிக்கும் இடங்கள் கண்காணிக்கப்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

சீனாவில் ஏற்கெனவே ஹெச்1என்1 வைரஸ் என்ற பன்றிக்காய்ச்சல் வைரஸ் 2009-ல் பரவி பல்லாயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஃப்ளூ பன்றிக்காய்ச்சல் வைரஸ் மனிதர்களைத் தொற்றும் அபாயம் இருந்தாலும் உடனடியாக இன்னொரு பெருந்தொற்று உருவாக வாய்ப்பில்லை என்று கார்ல் பெர்க்ஸ்ட்ராம் என்ற பயாலஜிஸ்ட் கூறுகிறார்.