எங்களை பற்றி பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் - மஹேல

2020-07-04 00:31:02

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய மோசடி இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அண்மையில் முன்வைத்த கருத்திற்கு அமைய  வாக்குமூலம் வழங்க New;று (03) வருகைத் தர வேண்டாம் என விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவிற்கு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் மஹேல New;று காலை விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட  விசாரணைப் பிரிவிற்கு  வருகை தந்திருந்தார். இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மஹேல குறித்த விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பையும்தருவதாகவும்குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த மஹேல

நான் கிரிக்கெட் விளையாட்டை மிகவும் நேசிப்பவன். எனவே விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவினருக்கு தேவையான தகவல்களை வழங்குவது எனது பொறுப்பாகும்.

  (02) இரவு 11.30 மணியளவில் விசாரணை பிரிவில் ஆஜராக வேண்டாம் என எனக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் நான் தனிப்பட்ட காரணங்களால் விசாரணை பிரிவில் ஆஜராக மறுத்ததாக சில ஊடகங்கள் அறிவித்திருந்தது. அதை நான் அவதானித்ததேன். இதன் காரணமாகவே நான் இன்று (New;று )விசாரணை பிரிவில் ஆஜராகினேன் என குறிப்பிட்டிருந்தார்.

ஆட்ட நிர்ணய மோசடி குறித்த விசாரணை பிரிவில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே  முன்னாள் தெரிவுக்குழு தலைவர் அரவிந்த டி சில்வா   குமார் சங்கக்கார மற்றும் உபுல் தரங்க ஆகியோர்  வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.