விசாரணை நிறுத்தப்பட்டமை தவறு. பூரண விசாரணை வேண்டும் - மஹிந்தானந்த கோரிக்கை

2020-07-04 10:42:07

2011 உலகக் கிண்ண போட்டிக் காட்டிக் கொடுப்பு தொடர்பான விசாரணையை நிறுத்த பொலிஸார் எடுத்த நடவடிக்கை மிகவும் பிழையான ஒன்றெனவும். இது தொடர்பில் மீள விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி யிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைக்காக நான் வழங்கிய வாக்குமூலத்தில் கிரிக்கெட் வீரர்கள் தொடர்பில்லை என தெளிவாக கூறி உள்ளேன். அதனால் மஹீல ஜயவர்த்தன  குமார சங்கக்கார ஆகியோரை எந்த அடிப்படையில் பொலிஸார் விசாரணைக்கு அழைத்தார்கள் என எனக்குத் தெரியவில்லை.

தற்போதுள்ள சட்டத்தில் விசாரணை முன்னெடுக்க முடியாது என பொலிஸ் விசாரணை பிரிவு பிரதானி என்னிடம் கூறினார்.

போட்டிக் காட்டிக் கொடுப்புக்கு எதிரான சட்டம் 2019ம் ஆண்டே நடைமுறைக்கு வந்தது. சம்பவம் 2011ம் ஆண்டு இடம்பெற்றது.

அதனால் குமார சங்கக்காரவின் சட்டத்தரணி வாக்குமூலம் அளிக்க தாம் தலைபடவில்லை என தெரிவித்துள்ளார். காரணம் இந்த சட்டம் பிழை. எனவேதான் தாம் ஆரம்பித்த விசாரணை தவறு என பொலிஸார் தெரிந்து கொண்டனர்.

பிழையான விசாரணையை ஆரம்பித்த பொலிஸார் அதனை நிறுத்துவதாக கூறுவது தவறாகும். இதுவரை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவரிடம் மாத்திரமே பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அப்போது இருந்து கிரிக்கெட் நிர்வாக சபை செயலாளரிடம் வாக்குமூலம் பெற்றனரா? தலைவரிடம் வாக்குமூலம் பெற்றனரா? போட்டித் தொடருடன் தொடர்புடைய எவரிடமும் வாக்குமூலம் பெறவில்லை. யார் யாரிடம் தகவல் பெற வேண்டும் என்பதை நான்  தெளிவாகக் கூறி உள்ளேன்.

ஒரு நபரிடம் வாக்குமூலம் பெற்று ஆவணங்களை மூடி மறைக்க முடியுமா? பொலிஸார் இவ்வாறுதான் கடந்த காலங்களில் செயல்பட்டனர். அவ்வாறு  கோவைகளை மூடி சரிவராது.

நான் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளேன். இன்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏற்க முடியாத கருத்தை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் பூரண விசாரணை நடத்துமாறு நான் ஜனாதிபதியிடம் கூறி உள்ளேன். பொலிஸார் தங்கள் பிழைகளை மறைக்க என் மீது சுமை ஏற்றியுள்ளனர். என்னுடைய நிலைப்பாட்டில் மாற்றமில்லை என மஹிந்தானந்த தெரிவித்துள்ளார்.