நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் 15 மூலிகைகளை கொண்டு தயாரித்த இனிப்பு வகைகள் -- கொல்கத்தாவில் அறிமுகம்!!

2020-07-08 23:48:49

கொல்கத்தாவைச் சேர்ந்த ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர்  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் இனிப்பு வகைகளை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.

உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவை தடுக்க ஒவ்வொரு நாட்டினரும் பல்வேறு தடுப்பு முறைகளை கையாண்டு வருகின்றனர். கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமே ஒரே வழியாக கருதப்படுகிறது. மருந்து எதுவும் இதுவரை இல்லாத நிலையில்இநோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகள்  மூலிகைகளை எடுத்துக்கொள்ள தமிழக அரசு அறிவுரை வழங்கி வருகிறது.

இந்நிலையில்  மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர்  தனது வாடிக்கையாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இனிப்பு வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.