மனுக்குலத்தின் ஜோதி மனுஜோதி ஆசிரமம்

2020-07-15 18:59:09

உலகத்தில் எத்தனையோ ஆசிரமங்கள் இருந்தாலும்  ஒன்றே குலம் ஒருவனே தேவன்  என்ற கொள்கையை வலியுறுத்தி மக்கள் மத்தியிலே ஒற்றுமையை வளர்த்து  நடைமுறைப்படுத்தி வரும் மனுக்குலத்தின் ஜோதியாக மனுஜோதி ஆசிரமம் திகழ்ந்து வருகின்றது.

இந்த ஆசிரமமானது தென் இந்தியாவைச் சேர்ந்த தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முக்கூடல் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் 7 கி.மீ தொலைவில்அமைந்துள்ளது.

ஜாதி  மதம்  தேசம்  மொழி பேதமற்ற ஒரு உன்னத சமுதாயத்தை உலகில் உருவாக்கிட  ஒன்றே குலம் ஒருவனே தேவன்  என்ற கொள்கையை தம்முடைய வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு ஸ்ரீ பாலாசீர் லஹரி முத்துக்கிருஷ்ணா அவர்கள் 1963-ம் ஆண்டு நிறுவினார். மனுஜோதி ஆசிரமத்தில் தினசரி காலையும் மாலையும் உலக சமாதானத்திற்காக கூட்டுப் பிரார்த்தனைகள் பஜனைகள் ஆகியவை சங்கிலித்தொடர் போலதொடர்ந்து 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது.

 மனுஜோதி ஆசிரமம் மதமாற்றத்திற்காகவோ அல்லது சமூக சேவைக்காகவோ முக்யத்துவம் அளிக்க தோற்றுவிக்கப்பட்டது அல்ல. மக்கள் அழியா பெருவாழ்வாகிய நித்திய ஜீவனைப் பெற்றுக்கொண்டு தர்ம யுகத்தில் நீண்டகாலம் வாழ வழிநடத்துவதுதான் முக்கிய குறிகோளாகும்.

 பரிசுத்தவேதாகமம்திருக்குர்ஆன்ஸ்ரீமத்பகவத்கீதைபாகவதத்திலிருந்து தம்மை வெளிப்படுத்தி அவர் வெளிப்படுத்திய நற்செய்தியை நாங்கள் உலகமெங்கும் பறைசாற்றி வருகிறோம். ஒரே இறைவன் அருளிய வேதங்களாகிய பைபிள்பகவத் கீதை குர்-ஆன் போன்ற வேதங்கள் அனுதினமும் நடைபெறும் வழிபாட்டில் வாசிக்கப்படுகிறது.

 தேசீய ஒருமைப் பாட்டைக் காக்கும் விதமாக வழிபாட்டின் ஆரம்பத்தின்போதுஇந்தியதேசீயகீதம்பாடப்படுகிறது.அனைவரும் இதைப் பின்பற்றி நடக்கவேண்டும் என்பதற்காக இந்த ஆசிரமம் ஒரு பயிற்சிக் கூடமாக இருக்கின்றது.  சைவ உணவே இங்கு வழங்கப்படுகின்றது. ஆசிரமத்தில் பொது ஜனவாழ்க்கை - கூட்டு வாழ்க்கை பின்பற்றப்படுகிறது. ஜாதி  மத  மொழி பேதமற்ற ஒரு ஐக்கியத்தை இங்கே காணலாம். ஒரே குடும்பத்தினர் என்ற உணர்வோடு இங்குள்ள வேலைகளை அனைவரும் மனமுவந்து பகிர்ந்து செய்கின்றனர்.

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் இங்கு வரும் பக்தர்களுக்கு இறைவன் ஒருவர்தான் என்ற சத்தியத்தை உணர்த்தினார்.

அவரையே நாராயணர் என்றும்  கிறிஸ்து இயேசு என்றும் பற்பல நாமங்களால் அழைக்கின்றனர். ஆனால் அது ஒரே இறைவனின் பல காரணப்பெயர்கள் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தி வருகின்றோம்.

ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு கடவுள் இல்லை; கடவுள் ஒருவர்தான் என்பதை ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா வலியுறுத்தி அநேக வேதங்களிலிருந்தும் ஆதாரங்களை எடுத்துக்காட்டி நிரூபித்தார்.

இந்தியா புண்ணிய பூமி என்றும்  கீழ்த்திசை நாடாகிய இந்தியாவிலிருந்துதான் உலகிற்கு வெளிச்சம் வருகிறதென்றும் குறிப்பாக தென்னிந்தியாவில் திராவிட தேசத்தில் சம்பல கிராமத்தில் தாமிரபரணி தீரத்தில்தான் பகவான் அவதரிப்பார் என்றும்  மேலை நாட்டில் தோன்றியநாஸ்டிரடாமஸ் இந்தியாவில் திருவள்ளுவர்  இரவீந்திரநாத் தாகூர்  பாரதியார்  குருநானக்  வீரபிரம்மம்  முத்துக்குட்டிசாமி  காந்திஜி போன்ற அநேகர் தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறார்கள்.

எல்லா வேதங்களிலும் சில முக்கிய  அம்சங்கள் நீக்கப்பட்டும் சில சேர்க்கப்பட்டும் இருக்கிறது. ஆகவே வேதங்களை நமக்குப் பேசி அருளிச் செய்த அந்த  பகவான்தான் இந்த பூமிக்கு வந்து வேதங்களிலுள்ள இரகசியங்களை நமக்கு வெளிப்படுத்தித் தரமுடியும். இக்கலியுகத்தில் பகவான் கல்கி அவதாரமாக வெள்ளைக் குதிரையின்மேல் வருவதாக எல்லா வேதங்களிலும்கூறப்பட்டிருக்கிறது. கல்கி அவதாரம் வெள்ளை நிற குதிரையில் வருகிறார் என்று இந்துக்களின் வேதங்கள் கூறுகிறது.

அவர் வெள்ளைக் குதிரையின்மேல் வருகிறார் என்று பரிசுத்த வேதாகமத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது.

அதேவிதமாகஇஸ்லாமிய புஸ்தகங்களிலும்கூட இமாம் மஹதி வெள்ளைக் குதிரையில் வருவதாக கூறப்பட்டுள்ளது.இதனால் கல்கி அவதாரம் குதிரையின்மேல் பவனி வருவார் என்று எழுத்தின்படி நாம் அர்த்தங் கொள்ளக்கூடாது. ஆனால் இது சூசகமாகத்தான் கூறப்பட்டிருக்கிறது. பகவான் அவருடைய தீர்க்கதரிசிகளிடம்கூறியகலப்படமல்லாதவார்த்தையின்படியேதான் அதாவது வேதங்களின்படிதான் வருவார் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.

எல்லா வேதங்களையும் படிப்பதின்மூலம் இறைவன் ஒருவரே என்கின்ற உலகளாவிய தத்துவத்தை உணர்ந்துகொள்ள முடியும். தெய்வீக பயம் நமக்குள் ஏற்படும். மானிட வரலாற்றின் கடைசி அத்தியாயத்திற்கு வந்துள்ள நாம்  இறுதி யுகமாகிய தர்ம யுகத்தில் பிரவேசிக்கும் வழியை அறிந்துகொள்ள வேண்டும். இறைவன்தான் மனிதனாகவருகிறாரேயன்றி மனிதன் ஒருபோதும் கடவுளாக முடியாது என்கிற அரிய சத்தியத்தை ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரிகிருஷ்ணா அவர்கள் இவ்வுலகிற்கு எடுத்துரைத்துள்ளார். இறைவனுடன் ஒன்றர கலக்கும் ஆற்றலை வெவ்வேறு

யுகங்களில் தோன்றிய அவதார புருஷர்கள் அருளவில்லை. இந்த கடைசி யுகமாகிய கலியுகத்தில் தோன்றும் ஸ்ரீமந் நாராயணர்தான் நம் கர்ம பாவங்களை நீக்கி  ஜீவன் முக்தியை அருள முடியும். மனுகுலத்திற்கு ஜோதியாக விளங்கும் மனுஜோதி ஆசிரமத்தில் கொடுக்கப்படும் இந்த இறை ரகசியமானது கலியனை வெல்லும் ஆயுதமாகும்.

இலவசமாக ஆன்மீக புஸ்தகங்கள் மற்றும் சி.டி. பெற அனுகவேண்டிய முகவரி:

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா ஸ்தோத்திர தியான நிலையம்

மனுஜோதி ஆசிரமம்

சத்திய நகரம் (வழி) பாப்பாக்குடி - 627 602

திருநெல்வேலி மாவட்டம்

தொலைபேசி எண்: 04634-274543 --  9488434543

மின்னஞ்சல்: manujothi@bsnl.in