புத்தர் பெருமானின் புனித இடங்களில் சிங்கள சீன மொழிகளில் விளக்கங்கள்

2020-07-17 23:11:52

புத்தமத கொள்கையைப் பின்பற்றுபவர்கள் உலகம் முழுவதும் அதிகளவில் உள்ளனர். எனினும் புத்தரின் பூமியாக இந்தியா இருந்தும் புத்தமத பாரம்பரிய இடங்கள் அதிகளவில் இருந்தும் இங்கு புத்த யாத்தரிகள் குறைந்த அளவே வருதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கான காரணங்களை கண்டறிந்து அதற்கேற்ப சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என  படேல் வலியுறுத்தினார்.

நாட்டில் உள்ள முக்கிய புத்தமத தலங்களில் சீன மொழி உட்பட சர்வதேச மொழிகளில் விளக்கங்கள்  வரைபடங்கள் இடம் பெற வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள சாரநாத்  குஷிநகர் மற்றும் சரவஸ்தி உட்பட 5 புத்த தலங்களில் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.

அதேபோல்  சாஞ்சிக்கு அதிகளவில் இலங்கை சுற்றுலாப் பயணிகள் வருவதால்  அங்குள்ள நினைவிடங்களில் சிங்கள மொழியில் விளக்கங்கள் இருக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

உத்திரப்பிரதேசத்தில் உள்ள குஷிநகர் விமான நிலையத்தை  சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதையும் சுற்றுலாத்துறை இணையமைச்சர் சுட்டிக் காட்டினார்.

 இது உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா மற்றும் உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்குவிப்பாக இருக்கும்.

நாட்டில் உள்ள புத்தமத தலங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் பல நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 புத்த சுற்றுலாவை மேம்படுத்துவதில்  புத்த சுற்றுலா நடத்துனர்கள் சங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.

இந்தியா மற்றும் வெளி நாடுகளில் இந்த சங்கத்தில்.1500க்கும் மேற்பட்டோர் உறுப்பினர் களாக உள்ளனர். இந்த இணையக்கருத்தரங்கில் ஐ.நா அமைதிப்படை கவுன்சில் பிரதிநிதிகள் ஆப்கானிஸ்தான்  வங்கதேசம்  பூடான்  கம்போடியா  இந்தோனேஷியா  மியான்மர் நேபாளம்  இலங்கை  தாய்லாந்து மற்றும் வியட்நாம் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.