சா.கந்தசாமி காலமானார்.

2020-08-02 23:44:38

சாயாவனம் என்ற நாவல் மூலமாக நவீன தமிழ் இலக்கிய உலகுக்கு 1970-களில் அறிமுகமானவர் எழுத்தாளர் சா. கந்தசாமி.

சா. கந்தசாமி 1940-ம் ஆண்டில் தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்தார். சென்னையில் 1963-லிருந்து சில நண்பர்களுடன் சேர்ந்து இலக்கியம் சார்ந்த செயற்பாடுகளுடன் இயங்கினார். இதன் பேறாகவே  கசடறதபற  எனும் இதழ் உருவானது.

இவரது சுடுமண் சிலைகள் என்ற தமிழகப் பாரம்பரியக் கலைகள் பற்றிய குறும்படம் சர்வதேச விருது பெற்றது. சிற்பி தனபால்  ஜெயகாந்தன்  அசோகமித்திரன் போன் றோரின் வாழ்வும் பணியும் பற்றிய குறும்படங்களை எடுத்துள்ளார்.

இவரது நாவல்களில்  தொலைந்தவர்கள்  சாயாவனம்   விசாரணைக் கமிஷன் போன்றவற்றுக்குத் தனியான அடையாளம் உண்டு.   விசாரணைக் கமிஷன்  நாவலுக்கு   1998-ம் ஆண்டின் சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.

-    கருணாகரன்.

      முகநூல் பதிவு.