அதிக வெப்பம் காரணமா. தொன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!

2020-08-14 23:13:21

 

பிரான்சில் Val-d Oise  மாவட்டத்தில் உள்ள குளம் ஒன்றில் தொன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கின்றன.

Enghien-les-Bains மற்றும் Soisy-sous-Montmorency இணையும் குளத்திலேயே இந்த மீன்கள் செத்து மிதக்கின்றன. கிட்டத்தட்ட 10 தொன் எடைகொண்ட மீன்கள் செத்து மடிந்துள்ளன.

(13) வியாழக்கிழமை இக்கோர காட்சியை மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

இவ்வாரத்தில் நிலவிய அதிக வெப்பம் காரணமாக மீன்களுக்கு போதிய ஒக்சிசன் கிடைக்கவில்லை. இதனால் மீன்கள் சாவடைந்துள்ளன  என Enghien-les-Bains  நகர முதல்வர் Philippe Sueur தெரிவித்துள்ளார்.

ஆனால் அதிக வெப்பம் காரணமாக மீன்கள் சாவடைந்துள்ளமை சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதனால் உடனடியாக இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. நீரில் வேறு எந்த ரசாயனமோ அல்லது நச்சுப்பொருளோ கலக்கப்படவில்லை எனவும்  மீன்களுக்கு போதிய ஒக்சிசன் கிடைக்கவில்லை என்பதே காரணமாக இருக்கின்றது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

- பரிஸ் தமிழ்