.ஐயருக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் - பேராசிரியர் மௌனகுரு

2020-08-26 17:06:45

-              திரி எரிந்து ஒளி  தருவது போல ஐயர் தான் எரிந்து ஒளி தருகிறார்

ஐயரே  நீவிர்  நீடூழி  வாழ்க ஒளியாகப்  பயன்தருக  .

ஐயர் ஒரு வித்தியாசமான பிறவி.அவரை நான் 80களில்  யாழ்ப்பாணத்தில் சந்தித்தேன். பெரிய கேரியர் வைத்த ஒரு சைக்கிளில் பெறுமதியான புத்தகங்களைச் சுமந்துகொண்டு  நல்ல வாசகர்களை இனம் கண்டு அவற்றை அறிமுகம் செய்து கொண்டு திரிந்தார்

.ஒரு புத்தக வியாபாரி என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன்

அவருடன் பழகப்பழக அவருடைய நல்ல  எண்ணங்களும்  நோக்கங்களும்  விளங்க ஆரம்பித்தன

கோட்பா ட்டு ரீதியாக அன்று  அவருக்கும் எனக்கும் இடையே பலத்த வேறுபாடுகள் இருந்தன

. ஆனால் நல்ல நட்பு உருவானது

பின்னர் அது குடும்ப நட்பாக மலர்ந்தது.

ஒரு திசையில் வாசித்துக்கொண்டிருந்த எனக்குப் பல திசைகளிலும் வாசிக்கும் சந்தர்ப்பம்  ஏ ற்பட்டது.

அதற்காக ஐயருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன்

 அண்மையில் நானும் என் மனைவியும்  ஸ்காட்லான்ட் செல்லும் சந்தர்ப்பம் வாய்த்தது

   அப்படியே லண் டனுக்கும் சென்றோம் 

மூன்று நாட்கள் தான் அங்கு நின்றமையினால் பல நண்பர்களைப் பார்க்க முடியவில்லை.

ஆனால் ஐயரை எப்பிடியாவது பார்ப்பது என்பது எனது திட்டம்

.நண்பர் ஒருவரின் உதவியுடன் ஐயரின் வீட்டுக்கு ஒரு  நாள் இரவு நானும் மனைவியும்  மகனும் சென்றோம்

.புத்தகக் குவியல்களின்  நடுவே  ஐய ரின் கட்டி லும்  மேசையும் அதன் மீது  கணணியும் இருந்தன

.சுகம் விசாரித்த  பின்னர் வழக்கம் போல ஐயர்  நல்ல புதிய புத்தகங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்து விட்டார்

சற்றும்  மாறாத அதே ஐயர்.

.இம்முறை ஐயரின் ஆர்வம் கர்நாடக இசை பரத நாட்டியம்  போன்ற நுண் கலைகளின் மீது குவிந்திருந்தது

நான் நடத்தும்  அரங்க ஆய்வு கூடம் பற்றி அறிந்திருந்தார்

ஆர்வமுடன் விசாரித்தார்

.நான் அங்குமாணவர்களுக்கு செவ்வியல் நடனங்களையும் இசையையும் அறிமுகம் செய்வதாகக் கூறினேன் .

மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.

தான் மணக்கால் ரங்கராஜனை அழைத்து லண்டனில் கச்சேரி நடத்தியதைக் கூறினார்

 .மீண்டும் ஒருமுறை சந்திப்பதாகத் தீர்மானித்தோம்.

ஆனால் வாய்ப்புக் கிட்டவில்லை

நான் தங்கியிருந்த வீட்டுக்கு வந்து சிறிது நேரத்தில் ஐயரிடமிருந்து தொலை பேசி அழைப்பு மணக்கால் ரங்கரஜானின் இராக ஆலாபனை ஒன்றை தொலைபேசி மூலமாக எனக்கு அறிமுகம் செய்தார்.மிக அருமையான இசை அது.

.தான் பெற்ற இன்பத்தை மற்றவரும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கு

  நான் புறப்படும் அன்று காலை தொலைபேசியில் பேசிய அவர் என்னை ஹீத்ரு விமான நிலையத்தில் சந்திப்பதாகக் கூறினார்

.அவர் உடல் நிலை கருதி நான் அவரை வந்து கஷ்டப்பட வேண்டாம் என்று கூறினேன்.

விமான நிலையத்திற்கு என்னை அழைத்துச் சென்ற பிரமிளா சுகுமார் தம்பதியினருடனும் எம்மைச் சந்திக்க வந்த ஓவியை அருந்ததியுடனும்  விமானநிலையத்திலிருந்து உரையாடிக் கொண்டிருந்தோம். 

 சிலவேளை  ஐயர் வந்திருக்கக் கூடுமோ என்றொரு ஐயம்.

விமான நிலையத்திற்ற்கு வெளியே சென்று பார்த்தேன்

 .ஐயரை க்காணவில்லை

வந்திருக்கமாட்டார் என எண்ணிக்கொண்டேன்

   .

ஒருமுறை உட்புகும் வாசலில் நிற்கக்கூடும் என்று நினைத்து அங்கு சென்றேன்

 அங்கே ஐயர்  என்னிடமிருந்து நீங்கள் தப்பிவிட முடியாது என்ற தோரணையில் நின்றுகொண்டிருந்தார்.

.சும்மா அல்ல

ஒரு பெரிய பார்சலோடு

.அதற்குள் மிகப்பெரிய கர்நாடக இசை வித்துவான்களின் பாடல்களும்

.மிகப்பெரிய பரத நடன மணிகளின் ஆடல்களும்

ஓவியம் சிற்பம் சினிமா இலக்கியம் சம்பந்தமான தகவல்களும்

டிவிடி  சிடி  வடிவில் உள்ளதாகவும் கூறினார்.

அத்தோடு மிகப்பெறுமதியான கருநாடக இசை வித்துவான்கள் பற்றிய  ஆங்கிலத்தினாலான இரு பெரும் நூல்கள்.

அவற்றின் பணப் பெறுமதி அதிகம்

நான் அசந்து போய்விட்டேன்

ஒரு கணப்பொழுதினுள்  மிகப்பெரும் செல்வத்தை அடைந்து விட்ட உணர்வு .பூரிப்பு.

ஐயரின் செயற்பாடு என்னைச் சிலிர்ப்படையச் செய்தது

அதற்குரிய பணத்தினை  ஒரு குத்துமதிப்பாகாக் கணக்கிட்டு ஐயருக்குக் கொடுக்க நினைத்த போது ஐயர் வன்மையாக மறுத்துவிட்டார்

எனக்கு என்னசெய்வது என்று தெரியவில்லை

.மிகுந்த மரியாதையுடன் அவரிடமிருந்து விடை பெற்றேன்

மட்டக்களப்பு வந்தபின் இங்கு வந்த ஒருவரிடம் மேலும் பல டிவிடிக்களும் சிடிக்களும் அனுப்பிவைத்திருந்தார்

அவை யாவும் இங்கு சரியானபடி பிரயோசனப் படுத்தப் படுகின்றன. அத்தகைய ஒரு சேமிப்பு பல்கலைக் கழகத்தில் கூட இல்லை.

மாணாக்கர் மிகுந்த பயன் பெறுகின்றனர் .

ஐயருக்கு  நன்றிகூற வார்த்தைகள் இல்லை.

திரி எரிந்து ஒளி  தருவது போல ஐயர் தான் எரிந்து ஒளி தருகிறார்

ஐயரே  நீவிர்  நீடூழி  வாழ்க ஒளியாகப்  பயன்தருக  .

-              முகநூல் பதிவு