19 ஆயிரம் பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் முடிவு

2020-08-26 20:06:47

சிகாகோ

கொரோனா பரவலால் விமானப் போக்குவரத்து நலிவடைந்தது உள்ளது. இதை தொடர்ந்து  19 ஆயிரம் பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும்30 சதவீதம் வேலைகளை குறைக்க திட்டமிட்டு உள்ளது.

திட்டமிடப்பட்ட வேலை இழப்புகள் 17500 தொழிற்சங்கத் தொழிலாளர்களைக் கொண்டிருக்கின்றன - இதில் 1600 விமானிகள் மற்றும் 8100 விமான உதவியாளர்கள் - மற்றும் 1500 நிர்வாக பதவிகள் உள்ளன.

தொற்றுநோய்க்கு முன்னர் 140000 ஊழியர்களைக் கொண்டிருந்த அமெரிக்க ஏர்கைன்ஸ் விமான நிறுவனத்தின் பங்குகள் 2.7 சத வீதம் சரிந்தன.

நலிவடைந்த விமான நிறுவனங்களுக்கு 25 பில்லியன் டாலர் நிதியுதவியை அமெரிக்க அரசு கடந்த மார்ச் மாதம் அறிவித்தபோதும்  மேலும் 25 பில்லியன் டாலர்கள் வழங்கவேண்டுமென விமான நிறுவனங்கள் வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையில் விமான நிறுவனங்களின் பங்கு சரிவடைந்ததால் நிலைமை மேலும் மோசமானது. இதனால் தற்போதைய நிலையில் 50 சதவீதத்திற்கும் குறைவான அளவே விமானப் பயணங்களை திட்டமிட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. எனவே பணியாளர்களை வேலைநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

மேலும் படிக்க