வாரபலன் 18.09.2020 - 24.09.2020

2020-09-16 17:41:37

 

மேஷம்:

மாணவர்களுக்கு மனஉறுதியும் மீனவர்களுக்கு பணவரவும் கிடைக்கக்கூடிய பாக்கியமான வாரம். புது முயற்சிகள் பலன் அளிக்கும். பணம் புரளும். எதிலும் வெற்றி கிட்டும். ஏற்றம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வாழ்க்கைத் துணையால் வளம் பெருகும். பாலிய நண்பர் சந்திப்பு கிட்டும். பொருளாதாரம் மேம்படும். பேச்சில் கவனம் தேவை. கடன் பாக்கிகள் வசூலாகும். வாகன யோகமுண்டு. ஆபரணச் சேர்க்கை உண்டு. அதிகாரம் குவியும். சகோதர வழியில் கவனம்தேவை.

 • வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ ராஜவிநாயகர்
 • அதிர்ஷ்ட எண் – 6- 0 – 7 - 4; அதிர்ஷ்ட நிறம் – ஆழ்ந்த வெண்மை
 •  அதிர்ஷ்ட எழுத்துக்கள் – I - S

-------------------------------

ரிஷபம்:

கோபத்தையும்  வேகத்தையும் தவிர்த்து லாபத்தைச் சேர்க்கக்கூடிய நல்ல வாரம். கடன் சுமை குறையும். கன்னிப் பெண்களின் விருப்பம் ஈடேறும். கணவன்  மனைவி உறவு தித்திக்கும். சுபகாரியங்கள் இல்லத்தில் இனிதே நடந்தேறும். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். பணநடமாட்டம் கூடும். இயற்கை காட்சிகளை கண்டு இன்புறுவீர்கள். உல்லாசப் பயணம்இனிக்கும். அணிமணிகள் சேரும். பெண்களுக்கு யோகம் கூடும். பணப்புழக்கம் சரளமாகும்.

 • வழிபட வேண்டிய தெய்வம்: நந்தாதேவி
 • அதிர்ஷ்ட எண் – 4 -  2 -  1 - 0;
 • அதிர்ஷ்ட நிறம் – சிவப்பு (செந்நிறம்)
 •  அதிர்ஷ்ட எழுத்துக்கள் –  F-K

----------------------------------

மிதுனம்:

சவாலான விஷயங்களை சமாளித்து சாதனை நிகழ்த்தக்கூடிய போதனையான வாரம். சுப காரியங்கள் இல்லத்தில் இனிதே நடந்தேறும். தென்றல் வீசும். எதிர்ப்புகள் விலகும். நோய் அகலும். பெயர்  புகழ்  கௌரவம்  செல்வாக்கு உயரும். புதிய வாகனங்களில் முதலீடு உண்டமாகும். பெண்களுக்கு மன அமைதியும்  மகிழ்ச்சியும் கிட்டும்.

 • வழிபட வேண்டிய தெய்வம்: புட்டுச் சொக்கநாதார்
 • அதிர்ஷ்ட எண் – 5 -  1 – 5 - 0;
 • அதிர்ஷ்ட நிறம் – சில்வர் கலர்
 •  அதிர்ஷ்ட எழுத்துக்கள் –  O - J

 

--------------------

கடகம்:

கசந்த காலங்கள் விலகி வசந்த காலங்கள் உருவாகக் கூடிய வலிமையான வாரம். பழைய பகை மாறும். அரசு வகையில் அனுகூலம் கிட்டும். பிள்ளைகளால் பெருமை கூடும்.புது முயற்சிகள் தள்ளி வைக்கவும். தனவரவுகள் தடைப்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு தோன்றும். சகோதர வகையில் சகாயம் கிட்டும்.உற்சாகம் அதிகரிக்கும். திடீர் செலவு ஏற்படும். மங்கல செய்தியால் மனம் மகிழும்.

 • வழிபட வேண்டிய தெய்வம்: வெக்காளியம்மன்
 • அதிர்ஷ்ட எண் – 9 -  3 – 2 - 7;
 • அதிர்ஷ்ட நிறம் – வாடாமல்லி
 •  அதிர்ஷ்ட எழுத்துக்கள் – S - R

 

----------------------------

சிம்மம்:

 

இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாய் அமையக் கூடிய நல்ல வாரம். ஆடம்பர செலவு அதிகரிக்கும். மாற்று இன நட்பு பெருகும். வயிற்று உபாதை வந்து சேரும். வங்கி சேமிப்பு உயரும். தொல்லை தந்தவர் விலகிவிடுவர். தொழில் வளர்ச்சி மேன்மை தரும். ஆனந்தம் குடிக்கொள்ளும். அணிகலன் ஆர்வம் அதிகரிக்கும்.பேச்சில் கணிவு தேவை. களவுப் போன பொருள் திரும்ப கிடைக்கும்.

 • வழிபட வேண்டிய தெய்வம்: திருமலைராயர்
 • அதிர்ஷ்ட எண் – 3 – 2 -  7 - 1;
 • அதிர்ஷ்ட நிறம் – யானை நிறம்
 •  அதிர்ஷ்ட எழுத்துக்கள் –  Y - V

-------------------------------

கன்னி:

நாற்காலி கனவுகள் நனவாகக் கூடிய நல்ல வாரம். இடமாற்றம் நன்மைத் தரும். குடும்ப அன்யோன்யம் பலப்படும். உத்தியோக உயர்வு கிட்டும். பூமி வாங்கும் யோகம் உண்டு. குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உடன் பிறப்புகளால் உதவி கிட்டும். அலைபேசி தகவல் ஆதாயம் தரும். மேன்மையான நாள். கடல் கடந்த பயணம் உண்டாகும். கண்ணாடித் தொழில் முன்னேற்றம் தரும்.

 • வழிபட வேண்டிய தெய்வம்: ஆதி விநாயகர்
 • அதிர்ஷ்ட எண் – 7 -  1 – 4 - 3;
 • அதிர்ஷ்ட நிறம் – ஊதா
 •  அதிர்ஷ்ட எழுத்துக்கள் –  P - F

-------------------------------

 

துலாம்:

பரபரப்பே இல்லாமல் பணவரவு பெருகக்கூடிய பக்குவமான வாரம். பிள்ளைகளால் நல்ல செய்திகள் வரும். நண்பர்கள் பிரிவு ஏற்படும். உற்சாகம் கலை கட்டும்.உறவினர் வருகை உண்டு. ஆறுதலான சூழ்நிலை அமையும். பணியில் உயர்வு கிட்டும். கஷ்டகாலம் மறையும். பணிவும் துணிவும் கூடும்.விவேகமான வாரம். வெளியூர் பயணம் வெற்றி தரும். பெண்களின் ஆலோசனை பெருமை தரும்.

 • வழிபட வேண்டிய தெய்வம்: ஹாரஹரசுதன்
 • அதிர்ஷ்ட எண் – 9 – 7 – 1 - 0;
 • அதிர்ஷ்ட நிறம் – கருப்பு (கருமை)
 •  அதிர்ஷ்ட எழுத்துக்கள் –   S - Q

-----------------------------

விருச்சிகம்:

உழைப்பால் மதிப்பும் உங்களால் சிறப்பும் சேரக்கூடிய பொறுப்பான வாரம். வாகன மாற்றம் உண்டாகும். மன அமைதி சீர்குலையும். மறைமுக எதிர்ப்பு விலகும். பயணங்களால் இடையூறு ஏற்படும். ஆன்மீக சிந்தனை அதிகமாகும். பிள்ளைகள் வழியில் தொல்லைகள் கூடும். பெற்றோர்கள் நலனில் அக்கறை கூடும். எதிரிகளின் தொல்லை குறையும். தொட்டது துலங்கும் நாள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.

 • வழிபட வேண்டிய தெய்வம்: சக்தி பாலகன்
 • அதிர்ஷ்ட எண் – 5
 •  அதிர்ஷ்ட நிறம் – ஆழ்ந்த சிகப்பு
 •  அதிர்ஷ்ட எழுத்துக்கள் – O - M

 

---------------------------

தனுசு:

இதயத்தில் உற்சாகமும்  இல்லத்தில் சந்தோஷமும் இனிமையாய் மலரக்கூடிய அற்புதமான வாரம். தன்னம்பிக்கை துளிர்விடும். பயணத்தால் வெகுமதி கிடைக்கும். ஆபரணப் பொருள் களவு போகும். நெருப்பினால் அபாயம் ஏற்படும். மறைமுக எதிர்ப்பு உருவாகும். அடுத்தவர் தலையீடு அதிகமாகும். ஆடம்பர எண்ணம் அதிகமாகும். அத்தியாவசிய செலவு அதிகமாகும். உறவினர் வருகை உண்டு. நட்டமில்லாத நன்மை அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்பு கிட்டும்.

வழிபட வேண்டிய தெய்வம்: சந்தான லட்சுமி கணபதி

அதிர்ஷ்ட எண் – 4 – 1 -  7 -8;

அதிர்ஷ்ட நிறம் – காவிநிறம்

 அதிர்ஷ்ட எழுத்துக்கள் – L - J

------------------------------

மகரம்:

கைமேல் காசும்  கௌரவ வாய்ப்பும் கிடைக்கக்கூடிய அற்புதமான வாரம். எலக்ட்ரிக்கல் தொழில் லாபம் தரும். அலைபேசித் தகவல் ஆதாயம் தரும். நல்லோர்களின் சந்திப்பு கிட்டும். பெயர்  புகழ் கௌரவம் செல்வாக்கு உயரும். பொதுப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். திருமணத் தடைகள் நீங்கும். புதுத் தொழிலை துவங்கும் வாய்ப்பு உள்ளது. வெளியூர் பயணம் நன்மை தரும். குடும்ப அன்யோன்யம் அதிகமாகும். வெளிநாட்டு நபரால் வெகுமதி கூடும். எண்ணிய காரியம் கை கூடும்.

புண்ணியஸ்தலம் செல்வீர்கள்.

 • வழிபட வேண்டிய தெய்வம்: மணகுழ பகவதி அம்மன்
 • அதிர்ஷ்ட எண்: 9 – 4 – 0 - 7;
 • அதிர்ஷ்ட நிறம்: குங்கும கலர்
 •  அதிர்ஷ்ட எழுத்துக்கள்: F - R

------------------------------------------------------

கும்பம்:

ஆதாயம் மிகுதியாகி ஆதாரம் வலுவடையக் கூடிய அற்புதமான வாரம். இனிப்பான செய்திகள் வரும். பழிச் சொல்லிலிருந்து விடுபடுவீர்கள். சொத்துப் பிரச்சனைகள் தீரும். பணியாட்களால் தொல்லை மாறும். கல்வியில் மந்த நிலை மாறும். ஜவுளித் தொழில் உயர்வு தரும். கலைத் தொழில் திருப்பம் வரும். அலுவலகங்களில் பாராட்டு குவியும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். மற்றவரின் தொல்லைக் குறையும். பிரித்து குடும்பம் ஒன்று சேரும்.

 • வழிபட வேண்டிய தெய்வம்: தாய் முகாம்பிகை
 • அதிர்ஷ்ட எண்: 1 -  9 – 5 - 2;
 •  அதிர்ஷ்ட நிறம்: சில்வர் கிரே
 •  அதிர்ஷ்ட எழுத்துக்கள்:  H - U

 

-------------------------

மீனம்:

 

பொல்லாத காலங்கள் சொல்லாமல் விலகக்கூடிய அற்புதமான வாரம். மனம் மகிழும் நாள். உழைப்பிற்கான பலனை பெறுவீர்கள். திறமைகள் அதிகமாகும். இன்னல்கள் அகலும். கடன் தீரும். ஆக்கம் அதிகரிக்கும்.பழைய பாக்கி வசூலாகும். வியாபாரத்தில் கவனம் தேவை. தனவரவில் தடங்கல் உண்டு. புதிய வாய்ப்புக்களை எதிர்பார்க்கலாம். பழைய நட்பு பலன் தரும். உறவினரால் பாதகம் உண்டு. உடல் நலனில் அக்கறை தேவை. உலோகத் தொழில் உயர்வு தரும்.

 • வழிபட வேண்டிய தெய்வம்: சிங்கப்பெருமாள்
 • அதிர்ஷ்ட எண்: 6 -  0 -  7 - 4;
 • அதிர்ஷ்ட நிறம்: யானை நிறம்
 •  அதிர்ஷ்ட எழுத்துக்கள்: . Z, - K.