முன்னாள் பாதுகாப்பு செயலாளர் பொய் கூறுகின்றார் - மைத்திரி விடுத்துள்ள திடீர் அறிக்கை!

2020-09-21 17:36:49

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ  வெளியிட்டுள்ள தகவல்கள் பொய் என முன்னாள் ஜனாதிபதியும் இன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேN அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஹேமசிறி பெர்ணான்டோ அளித்துள்ள சாட்சியங்களில் உண்மை இல்லை என மறுத்துள்ளார்.

அரசியல் தலையீடுகள் காரணமாகவே உயிர்த்தஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி என கருதப்படும் சஹ்ரான் ஹாசிமை கைதுசெய்யமுடியாமல் போனதாக  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் அரசியல் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது எனவும் மார்ச் 19ம் திகதி இடம்பெற்ற தேசிய புலனாய்வு கூட்டத்தில் ஐஎஸ் அமைப்பிடம் பயிற்சி பெற்ற பின்னர் நாடு திரும்பியவர்கள் குறித்து ஆராயப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு நாடு திரும்பியவர்கள் காரணமாக தேசிய பாதுகாப்புக்கும் மக்களுக்கும் ஆபத்து காணப்பட்டது. பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகள் சட்டத்தில் காணப்பட்டதாகவும் முஸ்லிம் அரசியல்வாதிகளை திருப்திபடுத்த வேண்டிய தேவை உட்பட அரசியல் காரணங்கள் காரணமாக நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஐந்து அரசியல்வாதிகள் ஜனாதிபதியை தவறாக வழிநடத்தியதன் காரணமாக ஏற்பட்ட பிளவு காரணமாக என்னால் தனிப்பட்ட முறையில் ஜனாதிபதிக்கு இதனை வலியுறுத்த முடியவில்லை என அவர் கூறியுள்ளார்.

முஸ்லிம் அடிப்படைவாதிகளை கைது செய்வது குறித்து ஜனாதிபதியிடம் கேட்டபோது முஸ்லிம் அரசியல்வாதிகளை பகைத்துக் கொள்ள முடியாது என்பதால் அதனை பிறகு பார்க்கலாம் என அவர் மறுத்துவிட்டதாகவும் ஹேமசிறி பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மேலும் படிக்க