எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 20வது திருத்தச் சட்ட மூலம் பாராளுமன்றில்

2020-09-22 17:13:39

எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு பட்டி அணிந்தும் 20வது திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னம் அணிந்தும் எதிர்ப்பை வெளியிட்டனர். பாராளுமன்றத்தில் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில்20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் நீதி அமைச்சர் அலி சப்ரியினால்குறித்தசட்டமூலம்பாராளுமன்றத்தில்சமர்பிக்கப்பட்டுள்ளது..

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் இன்று (22) ஒன்று கூடியிருந்தது.இதன்போது சட்டமூலம் சமர்பிக்கப்பட்டுள்ளதுடன் இன்று முதல் 7 நாட்களுக்குள் எந்தவொரு நபருக்கும் அதற்கான எதிர்ப்பு மனுக்கள் இருப்பின்அதனைமுன்வைக்கமுடியும்எனதெரிவிக்கப்பட்டுள்ளது

உயர்நீதிமன்றத்தின் முன் அரசியலமைப்பிற்கு சவால் விடுவதே இதன் நோக்கம் என்பதுடன் அவ்வாறு சவால்கள் இல்லாவிடின் 20 ஆவது திருத்தம் 7 நாட்களின் பின்  பாராளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்பிற்காக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இருப்பினும் யாரேனும் குறித்த காலப்பகுதியில் 20 ஆவது திருத்தத்திற்கு சவால் விடுவாராயின் உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து 21 நாட்களுக்குள் தனது முடிவை வழங்க வேண்டும்.நீதி மன்ற தீர்ப்பு வரும் வரையிலான

குறித்த காலப்பகுதியில் இந்த அரசியலமைப்பு தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க பாராளுமன்றத்திற்கு உரிமை இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

21 நாட்களுக்கு முன்னர் உயர் நீதிமன்றம் தனது தீர்மானத்தை அறிவித்தால்  அதன்பின்னர் 20 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்பிற்காக விவதாத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இரண்டாவது வாசிப்பு நிறைவடைந்த பின்னர் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதுடன் அதில் பாராளுமன்றத்தில் மூன்றின் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் செயற்குழு கூட்டத்தின் போது 20 ஆவது திருத்தத்தின் அனைத்து பிரிவுகளை ஒவ்வொன்றாக ஆராய்ந்து திருத்தங்கள் இருப்பின் அதனை தெரிவிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும்.

பின்னர் மூன்றாவது வாசிப்பின் போது வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதுடன் அதில் பாராளுமன்றத்தில் மூன்றின் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

இறுதியாக சபாநாயகர் அரசியலமைப்பிற்கு கையொப்பமிட்டதை அடுத்து அது சட்டமாக மாறும் என தெரிவிக்கப்படுகின்றது.

 

தொடர்புடைய செய்திகள்

மேலும் படிக்க