கோவிட் காலத்தில் சிறு வியாபாரங்கள் வருமானம் ஆகியவற்றை வலுப்படுத்த - ஒன்றாரியோ மாகாண என் டி பி யின் திட்டம்

2020-10-10 19:54:16

ஒன்றாரியோ மாகாணத்தில் தொழில் புரிவோருக்கு ஸ்திரமான வருமானமும் தொழில்களுமிருந்தால் தான் கோவிட் 19 இரண்டாம் அலையைச் சமாளிக்கவும் பொருளாதாரத்தை உயிர்ப்பிக்கவும் முடியும் என்ற நிலையில் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் அண்ட்ரியா ஹொர்வத்  மற்றும் டோலி பேகம் பாராளுமன்ற உறுப்பினர்  ஸ்காபரோ தென்மேற்கு ஆகியோர் புதிய திட்டமொன்றை வெளியிட்டுள்ளனர்.

கோவிட் -19 பேரிடரினால் எத்தனை தொழில் புரிவோர்கள்  சிறு வியாபார உரிமையாளர்கள் தம் வருமானத்தை இழக்கின்றனர் என்பதும் அதனால் நாளாந்த மளிகைப்பொருட்களைக் கொள்வனவு செய்யஇயலாமலும்  வாடகை மோட்கேஜ் முதலியனவற்றைச் செலுத்த முடியாமலும் இடர்ப்படுகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது  என்று ஹொர்வத் கூறினார்.

அதிக வேலை வாய்ப்புக்களும்  பாதுகாப்புமே கோவிட்-19 இன் இரண்டாவது அலையை முறியடிப்பதற்குத் தேவைப்படுகின்றன என்பது தெளிவு. பின்னடைந்த பொருளாதாரத்தை மீட்கும் பொருட்டு மக்களுக்குப் போதிய ஊதியம் கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் நாம் அறிவோம். எமது தேவை மக்களுக்கு நம்பிக்கையை அளிக்க வல்லதோர் சக்தி வாய்ந்த திட்டம்.

பேரிடர் ஆதரவு நிதியாக ஒதுக்கிவைக்கப்பட்ட் 6.7 பில்லியன் டொலர்களை ஃபோர்ட் அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளது என்றும் அந்நிதியின் பெரும்பகுதி மத்திய அரசுக்குரியதாயிருந்து மாகாண அரசுக்கு மாற்றப்பட்டது என்றும் ஒண்டாரியோவின் நிதிப் பொறுப்பு அதிகாரி வெளிப்படுத்தியுள்ளார்

 ஸ்காபரோ சமூகத்திலுள்ள சிறு வியாபார நிறுவனங்கள் தம் வாடகையைத் தொடர்ந்து செலுத்துவதற்கும்  பணியாளார்களுக்கு ஊதியத்தைக் கொடுப்பதற்கும் இந்நிதியின் ஒரு சிறு பகுதியின் மூலம் உதவ முடியும் என்று ஹொர்வத்  மற்றும் பேகம் ஆகியோர் கூறுகின்றனர்

டக் ஃபோர்ட் ஸ்காபரோவிலுள்ள சிறு வியாபாரங்களைத் தெரிவு செய்யாமல் பெரிய நிறுவனங்களுக்காகவே பணத்தைச் செலவு செய்ய விழைகிறார்.தெரிவு செய்யும் முறை தான் பிரச்சினை என்று பேகம் கூறினார்.

கடந்த ஏப்ரல் மாதம் இதேபோன்ற ஒரு திட்டத்தினை வெளியிட்ட என் டி பி  சிறு வியாபாரங்களும்  தொழில் புரிவோரும் எதிர்கொள்ளும் தற்போதைய சூழ்நிலைகளையும்  மாற்றங்களையும் கருத்திற்கொண்டு அத்திட்டத்தினைப் புதுப்பித்ததுடன் விரிவாக்கமும் செய்துள்ளது.

என் டீ பியின் இத்திட்டம் பல அம்சங்களை உள்ளடக்கியுள்ளது

•             .வாடகைக் கட்டணம் செலுத்த முடியாத வியாபார நிறுவனங்களை வெளியேற்றுவதைத் தடை செய்தல்.

•             வர்த்தகங்களுக்கான 75 சதவீத வாடகை மானியம் வியாபாரங்கள் தமது நிறுவனங்களைப் பாதுகாப்புடன் மீளத்திறப்பதற்குரிய செலவுகளுக்கு- அதாவது ப்ளாஸ்டிக் தடைகள் அமைப்பதற்குரிய செலவுகள் போன்றவைக்கு உதவுவதற்காக ஒரு நிதி

•             வேலைக்குச் செல்லும் பெற்றோருக்கு உதவும் முகமாக அதிக லாபமற்ற குழந்தை பராமரிக்கும் நிலைய இடங்களுடன் பொது குழந்தை பராமரிப்பு இடங்கள்

•             மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் அதிக கட்டணத்தை வசூலிப்பதையும் காப்பீட்டை வழங்க மறுப்பதையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வருதல்

ஆகியன இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

Media contact: Sarika Navanathan, 289-992-7255

தொடர்புடைய செய்திகள்

மேலும் படிக்க