உலகத் தமிழர்களை அழைக்கின்றது எழுமின் வட அமெரிக்க மாநாடு

2020-10-11 15:04:27

 

உலகில் மதிப்புறு மக்கள் இனமாக நாம் எழவேண்டுமென்ற வேட்கை நீறுபூத்த நெருப்பாக தமிழரிடையே இன்று இருக்கிறது.

தன்னெழுச்சியாகவும்  சிறு குழுக்களாகவும் நூற்றுக்கணக்கான முயற்சிகள் நடந்தேறியும் வருகின்றன.  The Rise - எழுமின் என்ற இயக்கம் இந்த வேட்கைக்கும்  தொடர் முயற்சிகளுக்கும்  புது விசையும் திசையும் தருகிறது. இரு ஆண்டுகளில் 20-க்கும் மேலான நாடுகளில் துளிர்த்துவிட்ட தன்னம்பிக்கையுடன் வேரோட்டம் தேடி முன்செல்கிறது The Rise – எழுமின்.

அக்டோபர் 23 மற்றும்  24 ஆகிய இரு நாட்களில் அமெரிக்க  கனடா நாட்டுத் தமிழர்கள் இணைந்து நடத்தும்  எழுமின் வட அமெரிக்க மாநாடு  உலகத் தமிழர்களுக்கு நம்பிக்கை தரும் சிறிய ஆனால் முக்கியமான திருப்புமுனையாக அமையுமென நாங்கள் நம்புகிறோம்.

அறவலிமையின் ஆன்ற தலைமையாக .பாலா சுவாமிநாதன் திகழ  வட அமெரிக்காவில் தமிழ் வளர்த்த  பால்பாண்டியன்  Dr சிகாகோ இளங்கோவன் போன்றோர் ஆசி நல்க அறத்துடன் செயல் மறமும் கொண்ட  ஆசீர் ஜஸ்டிபஸ் தலைமையில் புதியதொரு இளம் தலைமை முன் நிற்க களைகட்டுகிறது எழுமின் வட அமெரிக்கா.

வெற்றித் தமிழர்கள் பலர் உரையாற்றுகிறார்கள். புதிய பல முயற்சிகள் விவாதிக்கப்படும். மிக முக்கியமான வரலாற்றுத் தருணமாகிய

அக்டோபர் 23 மற்றும் 24 மாநாட்டில் பங்கேற்க உலகத் தமிழ் தொழில்முனைவோர் திறனாளர்கள் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். பதிவுக் கட்டணம் இல்லை. . usa.tamilrise.org இணைய வழியில் இன்றே பதிவு செய்யுங்கள்.

 

கனடாவில் தொடர்புகளுக்கு        dantont@canadiantamilcongress.ca 

மாநாட்டு அமைப்புக் குழு

The Rise  – எழுமின்இ வட அமெரிக்கா

மற்றும் The Rise Global

தொடர்புடைய செய்திகள்

மேலும் படிக்க