மொட்டு கட்சி எம்பிக்கள் கடிதம் கொடுத்தால் எவரையேனும் கைது செய்யும் சட்டம் நாட்டில் உள்ளதா? - முஜுபூர் ரஹுமான்

2020-10-11 15:20:16

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு கடிதம் கொடுத்தால் யாரையேனும் கைது செய்வதற்கான சட்டம் நாட்டில் உள்ளதா என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹுமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கைது செய்யுமாறு ஜனாதிபதியிடம் கடிதம் கொடுக்கின்றனர். அப்படி கைது செய்ய முடியுமா? மொட்டு கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட்டால் யாரையும் கைது செய்ய முடியுமான சட்டம் நாட்டில் உள்ளதா? அது என்ன சட்டம்?

அவ்வாறு ஜனாதிபதி ஒருவரை கைது செய்தால் நாட்டுக்கு நீதிமன்றம்  சட்டம்  பொலிஸ் தேவையில்லை. இதுவா நீதியான சமூகம்? ரியாஜ் பதியூதீனை கைது செய்தது நாங்கள் அல்ல. அவர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புபட்டவர் இல்லை என சமல் ராஜபக்ஷ பாராளுன்றில் கூறினார். சாட்சிகள் இல்லை என பொலிஸார் கூறுகின்றனர். ஆனால் கைது செய்யுமாறு எம்பிக்கள் கூறுகின்றனர். இவர்கள் பொலிஸாரா?  என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மேலும் படிக்க