3 கோடியே 83 லட்சம் பேருக்கு கொரோனா

2020-10-15 00:49:34

 

ஜெனீவா:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 83 லட்சமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இந்திய அரசு வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 55ஆயிரத்து 342 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 49 ஆயிரத்து 595 பேருக்கும்  இங்கிலாந்தில் 17 ஆயிரத்து 234 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் உலகிலேயே கொரோனா அதிவேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 3 கோடியே 83 லட்சத்து 46 ஆயிரத்து 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 84 லட்சத்து 20 ஆயிரத்து 663 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சி

கிச்சை பெறுபவர்களில் 69 ஆயிரத்து 830 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 85 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளது . ஆனாலும் கொரோனாவால் இதுவரை 10 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

மேலும் படிக்க