பெருந்தொற்றை நோய் எதிர்ப்பு சக்தியால் கட்டுப்படுத்த முடியாது - உலக சுகாதார அமைப்பின் தலைவர்

2020-10-15 00:54:21

 

ஜெனிவா:

நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டு ஒரு பெருந்தொற்றை கட்டுப்படுத்துவது என்பது வரலாற்றில் இல்லாத ஒன்று என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ரஷ்யா மட்டுமே கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக கூறப்பட்டாலும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

 அமெரிக்கா  இந்தியா  சீனா உள்ளிட்ட நாடுகளின் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அதேநேரத்தில்  மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலான மருந்துகளை தயாரிக்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரசை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனாம் கூறியதாவது:

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தடுப்பூசிகள் மூலம் வைரசை கட்டுப்படுத்துவிடலாம் என்று நினைக்கின்றனர். இது தான் கொரோனாவை தடுத்து நிறுத்த ஒரே வழி என்றும் கருத்துகின்றனர். இதற்கு அது தீர்வல்ல. நோய் எதிர்ப்பு சக்தி என்பது வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்வதே ஆகும். ஒரு பெருந்தொற்றை நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டு கட்டுப்படுத்துவது என்பது வரலாற்றில் இல்லாத ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்

தொடர்புடைய செய்திகள்

மேலும் படிக்க