விஷேட அதிரடி படையினரின் சுற்றிவளைப்பில் 10 பேர்கைது.

2020-10-16 23:51:59

வவுனியா

வவுனியாவில் தேசிய நீர் உயிரின செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விஷேட அதிரடிப்படையினர் இணைந்து (15) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வவுனியா மாவட்ட நீர் உயிரின செய்கை விரிவாக்கல் அதிகாரி யோகநாதன் நிசாந்தன் தலைமையிலான உத்தியோகத்தர்கள் மற்றும் மடுகந்தை விஷேட அதிரடிப்படையினரும் இணைந்து வவுனியா  பாவற்குளம் பகுதியில் மேற்கொண்ட இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சட்ட விரோதமான முறையில்  தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை உபயோகித்து மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களிடமிருந்து ரூபா 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளும்   கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர்கள் ஒவ்வொருவரும் 10 ஆயிரம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (20) ஆம் திகதி வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபடவுள்ளதாக

வவுனியா மாவட்ட நீர் உயிரின செய்கை விரிவாக்கல் அதிகாரி யோ.நிசாந்தன் தெரிவித்தார்.