ஆளில்லா தற்கொலைப்படை விமானங்களை சீனா தயாரித்து உள்ளது.

2020-10-17 16:03:48

பீஜிங்

எதிரி நாடுகளுக்கு மரண பயத்தை காட்டும் புதிய ஆயுதம் ஒன்றை சீனா காணொளி வடிவில் வெளியிட்டு ள்ளது.

லாரி ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள அந்த ஆயுதமானது  ஆளில்லா குட்டி விமானங்களை ஏவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.அந்த வெடிகுண்டுகள் குட்டி விமானங்கள் போர்முனையில் எதிரி நாடுகளின் ராணுவ டாங்கிகள் அல்லது ராணுவ முகாம்கள் மீது  தாக்குதலை தொடுக்கும் என கூறப்படுகிறது. இந்த  ஆயுதத்தை ஹெலிகொப்டர் மூலம் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் .

தைவானுக்கு எதிராக தற்போது ராணுவப் பயிற்சியை முன்னெடுத்திருக்கும் சீனா அச்சுறுத்தும் இந்த புதிய ஆயுதத்தை அறிமுகம் செய்துள்ளது.ஒரே நேரத்தில் 48 ஆயுதம் தாங்கிய ஆளில்லா குட்டி விமானத்தை இதன் மூலம் ஏவ முடியும் என கூறப்படுகிறது.ஒவ்வொரு குட்டி விமானமும் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதத்துடன் ஏவப்படுகிறது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் பேரழிவை ஏற்படுத்த முடியும்.

மேலும் 40 நிமிடங்கள் வரை வானத்தில் பறந்து இலக்கை எட்டும் வகையில் இந்த புதிய ரக ஆயுதம் வடிவமைக்கப்பட்டுள்ளது.மட்டுமின்றி  ஒரு ராணுவ வீரரால் இந்த குட்டி விமானங்கள் கண்காணிக்கப்பட்டு  கட்டுப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.