கம்பஹா மாவட்டத்தில் வங்கிக்கிளைகள் இன்று திறப்பு

2020-10-26 00:31:54

 

கம்பஹா மாவட்டத்தில் வங்கிக்கிளைகள்இன்று(26)   திறக்கடவுள்ளன.

கம்பஹா மாவட்டத்தில் இன்றைய தினம் (26) அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிக் கிளைகள் திறந்திருக்கும் என்று கொவிட் 19 வைரசு தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இந்த வங்கிக் கிளைகளை திறப்பதற்கு தேவையான அலுவலர்கள் தமது நிறுவன அடையாள அட்டையைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்கு வருகை தர முடியும் என்று கொவிட் 19 வைரசு பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.