பதியுதீனின் விளக்கமறியல் நீடிப்பு

2020-10-28 01:09:55

 

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் விளக்கமறியல் எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீன் சமர்ப்பித்த பிணை விண்ணப்ப மனுவையும் நீதவான் தள்ளுபடி செய்துள்ளார்.

இதேவேளை  ரிசாத் பதியூதீனுக்கு அடைக்கலம் கொடுத்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட விசேட வைத்திய நிபுணர் மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட 7 பேரை பிணையில் விடுதலை செய்ய கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.