ஹப்புத்தளையில் 5 பேருக்கு கொரோனா

2020-10-28 01:26:26

ஹப்புத்தளை பிரதேசத்தில் தற்போதைய நிலையில் 05 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

ஹப்புத்தளை சுகாதார வைத்திய பிரிவில் நேற்று  இரண்டு தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டதாக பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

பிரதேசத்தில் இனங்காணப்பட்ட அனைத்து தொற்றாளர்களும் பேலியகொடை மீன் சந்தை தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.