தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாரத்தில் 2 நாட்கள் கடைகள் திறப்பு

2020-10-28 01:32:38

 

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாரத்தில் 2 நாட்கள் கடைகள் திறக்கப்படவுள்ளன.

பின்வரும் மாவட்டங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் வலயப் பகுதிகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை வாரத்தில் 2 நாடகள் என்ற ரீதியில் கீழே குறிப்பிட்ட படி காலை 8 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையில் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக கொவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

  • கம்பஹா மாவட்டம்

ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு தினங்கள்

  • கொழும்பு மாவட்டம்

ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்கள்

  • களுத்துறை மாவட்டம்

ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு தினங்கள்

  • குருநாகல் மாவட்டம்

ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்கள்