உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு.

2019-08-30 18:39:49


(காரைதீவு நிருபர் சகா)

கிழக்குமாகாண விவசாயத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தில் உணவு உற்பத்தியையும் நுகர்வையும் ஊக்குவிக்கும் விழிப்புணர்வுச் செயலமர்வுகள் பிரதேசம்தோறும் நடைபெற்றுவருகின்றன.

சம்மாந்துறை கிழக்கு விவசாயப்போதனாசிரியர் பிரிவு ஏற்பாடு செய்த உணவுஉற்பத்தி செய்துகாட்டல் நிகழ்வு போதனாசிரியர் திருமதி சமேதா கீர்த்தனன் தலைமையில் வீரமுனையில் நேற்று நடைபெற்றது.
விவசாயதொழினுட்ப உதவியாளர் செல்வி.இ.ரஜிரேகாவின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாரம்பரிய உணவின் முக்கியத்துவம் பற்றியும் மரக்கறிகளை பெறுமதிசேர்த்தல் சந்தைப்படுத்தல் பற்றியும் விவசாயிகளுக்கு விளக்களிக்கப்பட்டது.

சம்மாந்துறை வலய விவசாய உத்தியோகத்தர் எம்.பி.எம்.இர்சாட் வலயபாடவிதான உத்தியோகத்தர் பி.குணநீதராஜா மற்றும் பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
தேவையேற்படும் பட்சத்தில் செய்முறைவிளக்கமும் விவசாயதொழினுட்ப உதவியாளர் செல்வி.இ.ரஜிரேகாவினால் செய்துகாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.