மாணவர்கள் பாடசாலை செல்வதற்கான விசேட வேலைத்திட்டம் - இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம
இன்று முதல் பாடசாலைகள் ஆரம்பமாகும் பிரதேசங்களில் பஸ்கள் மூலம் மாணவர்கள் செல்வதற்கான விசேட வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பஸ் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்காக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறை போக்குவரத்து பிரிவுடன் இணைந்து இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதற்கென குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. வலயக்கல்வி பணிப்பாளர் ஊடாக அமைக்கப்பட்ட இந்த குழுவில் இலங்கை போக்குவரத்து சபைஇ தனியார் போக்குவரத்து சேவை அதிகாரசபை அதிகாரிகள் ஆகியோர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். போதுமான பஸ்கள் இல்லாத பட்ச்சத்தில் வலயக்கல்வி அதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக இலங்கை போக்குவரத்து சபையின் முகாமையாளர் அங்கீகாரத்துடன் பஸ் சேவைகளை அதிகரிக்க முடியும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்தார்.