வவுனியாவில் குறைந்தளவிலான மாணவர்களுடன் பாடசாலைகள் மீள ஆரம்பித்தது

2020-11-23 22:31:07

 

மூன்றாம் தவணைக்கான பாடசாலைகள் இன்று ஆரம்பித்துள்ள நிலையில் வவுனியாவில் உள்ள பாடசாலைகளில் குறைந்தளவிலான மாணவர்களே பிரசன்னமாகியிருந்தனர்.

கொரனா அச்சுறுத்தல் காரணமாக மூன்றாம் தவணை பாடசாலைகள் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு இன்று தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியது.

இந்நிலையில் பாடசலைகள் மீள ஆரம்பித்துள்ள போதிலும் மாணவர்களின் வரவு குறைவாகவே காணப்பட்டது.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் கற்கும் மாணவர்களின் தொகை அதிகமாகவுள்ளமையினால் இரு பிரிவுகளாக பாடசாலையை நடத்த திட்டமிட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாகவே குறித்த பாடசாலையில் இன்று குறைந்தளவிலான மாணவர்கள் பிரசன்னமாகியிருந்ததாகவும் அதிபரினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.