சஜித் - சந்திரிக்கா விசேட சந்திப்பு !

2020-11-23 23:43:00

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இன்று (23) இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு உலகளாவிய பேரழிவான கொரோனாவின் அச்சுறுத்தலை மையமாகக் கொண்டு நடைபெற்றுள்ளது. உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கடுமையான பேரழிவாக மாறிவரும் ஒரு நேரத்தில் கொரோனா தொற்றுநோயால் ஏற்படும் சவால்கள் மற்றும் அவற்றை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு பொருத்தமான தேசிய சுற்றுச்சூழல் கொள்கையை வகுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் உலகெங்கிலும் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் குறித்தும் இதன்போது மேலும் கருத்துகளையும் அவர்கள் பரிமாறிக் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மேலும் படிக்க