ஓவ்வாமைக்கு சைவ தாவரப் பால்

2019-09-08 02:05:25


மேற்குலகில் வயதான ஆனால் வசதியானவர்கள் அதிகம். இவர்களுக்கு வயது ஆக ஆக பால் அருந்துவதில் ஒவ்வாமை ஏற்படுகிறது. தவிர பாலில் இருக்கும் லாக்டோஸ் கொலஸ்ட்ரால் குளூட்டென் போன்றவை பெரியவர்களுக்கு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது.
இவர்களுக்கென தாவரங்களிலிலிருந்து எடுக்கப்படும் புரதம் உள்ளிட்ட சத்துக்களை வைத்து சைவப் பாலை தயாரித்துள்ளனர் பெரின்னியல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள்.

பாதாம் பட்டாணி அரிசி மற்றும் சோயா ஆகிவற்றின் புரதங்களை வைத்து 2 சதவீத சத்துக்களைக் கொண்ட பாக்கெட் பாலின் தோற்றம் ருசி மணம் ஆகியவை வரும் விதத்தில் வடிவமைக்கப் பட்டுள்ளது பெரின்னியலின் சத்து பானம்.
இதை பாலுக்கு மாற்றாக 50க்கும் மேற்பட்ட வயதினர் தினமும் பருகலாம் என்கின்றனர் பெரின்னியலின் விஞ்ஞானிகள்.

மேலும் பெரின்னியலில் முதியோரின் ஜீரண சக்தி மூளைத் திறன் இதய நலன் ஆகியவற்றுக்கு உதவும் சத்துக்களையும் சேர்த்திருப்பதால் பெரின்னியலின் சைவத் தாவரப் பாலை ஓய்வுக் காலத்தை ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக கழிக்க விரும்பும் பெரியவர்கள் வரவேற்பர் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.