Back to homepage

Latest News - NEWSFEACTURER

புலமைப்பரிசில்பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பம்!  

2020-10-22 23:17:11

காரைதீவு நிருபர் சகா

கடந்த ஞாயிறன்று(11) நடைபெற்ற  5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று  (22) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நாடெங்கிலுமுள்ள 39 மத்திய நிலையங்களில் இப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

முன்னாள் வன்னி எம் பி காலமானார்  

2020-10-22 23:08:52

வவுனியா

முன்னாள் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் கே. பாலச்சந்திரன் இன்று (22) மாரடைப்பால் காலமானார்.

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதிகாலை 2.30 மணியளவில் இவரின் உயிர் பிரிந்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சபை அமர்வில் கலந்து கொள்வது குறித்து சபாநாயகர் விளக்கம்  

2020-10-20 20:27:42

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கான கோரிக்கை சட்ட ரீதியில் முன்வைக்கப்படுமாயின் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

ரயில் சேவைகளில் மாற்றம் - கல்கிசை காங்கேசன்துறை ரயில் சேவை தினத்திலும் மாற்றம்  

2020-10-20 20:21:35

தற்போதைய நிலைமையை கவனத்தில் கொண்டு இன்று தொடக்கம் சில ரயில் சேவைகளில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதூஷின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு  

2020-10-20 19:41:06

மாளிகாவத்த வீட்டு தொகுதியில் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த பிரபல போதைப்பொருள் வர்த்தகர் மாகந்துர மதூஷின் சடலத்தை அவர்களுது குடுப்பத்தினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று இரவு 8 மணிக்கு விளக்குகளை அணைத்து ஒரு விளக்கினை ஏற்றுங்கள் - இளையோர் அணி வேண்டுகோள்!  

2020-10-20 17:14:47

அரசியலமைப்பின் 20 வது திருத்த சட்டமூலம் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை 20ம் திகதி  இரவு 8 மணிக்கு வீடுகளில் மின் விளக்குகளை அணைத்து மூன்று நிமிடங்களுக்கு ஒரு ஒளி விளக்கினை மாத்திரம் ஏற்றுமாறு ஜனநாயகத்திற்கான ஒன்றிணைந்த இளையோர் அணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!  

2020-10-20 17:02:18

கடந்த வாரம் முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் வைத்து மரகடத்தலுடன் தொடர்புடைய கும்பல் நடாத்திய தாக்குதலில் பாதிக்கபட்ட முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரியும் அழிக்கப்பட்டுவரும் காடுகளை பாதுகாக்க கோரியும் முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களால் (19)கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முல்லைத்தீவு நகரில் மேற்கொள்ளபட்டது .

இலங்கைக்கான இந்திய உதவிகள் தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படக் கூடாது - பிரதமர் மோடியிடம் விக்னேஸ்வரன் முன்வைத்துள்ள கோரிக்கை!  

2020-10-20 16:53:52

பௌத்த மதத்துக்கு வழங்கப்படும் நிதி  ஆயுதப் படைகளுக்கு பயிற்சிக்காக வழங்கப்படும் உதவிகள் தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட கூடாது என்ற உத்தரவாதத்தை இலங்கை அரசிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்

கொழும்பு மாளிகாவத்தை வீடமைப்புத் திட்டப் பகுதியில் போதைப் பொருள் காட்டச் சென்ற வேளை மாகந்துரே மதூஷ் சுட்டுக் கொலை!   

2020-10-20 12:41:40

கொழும்பு மாளிகாவத்தை வீடமைப்புத் திட்டப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துர மதூஷ் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு  

2020-10-19 20:35:36

வவுனியா

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ம. நிமலராஜனின் 20 ஆவது நினைவுதினம் இன்று வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தினால் அனுஸ்டிக்கப்பட்டது.

சீதாஎலியவிலிருந்து அயோத்தி ஶ்ரீ ராமர் கோவிலுக்கான அடிக்கல்   

2020-10-19 20:27:38

(க.கிஷாந்தன்)

அயோத்தியில் நிர்மாணிக்கப்படும் ஶ்ரீ ராமர் கோவிலுக்கான அடிக்கல் ஒன்று இலங்கையிலிருந்து பூஜிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

ரிஷாட் பதியுதீன் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது  

2020-10-19 19:28:52

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளருகைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் இன்று காலை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதனடிப்படையில் தெஹிவளைஇ எபனைஸ் கிளேஸ் பகுதியின் அடுக்குமாடி வீட்டு தொடரில் உள்ள வீடொன்றின் உரிமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.