Back to homepage

Latest News - SPORTS

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்  

2021-01-20 15:47:01

•    பிரிஸ்பேன் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா மொத்தம் 430 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.

துபாய்:

பிரிஸ்பேன் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குரிய 30 புள்ளிகளை வசப்படுத்தியது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா மொத்தம் 430 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.

ஆஸி ஆடுகளத்தில் முத்திரை பதித்த தமிழர்  

2020-12-11 00:40:16

 

சிவா பரமேஸ்வரன்  மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்

ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெராவில் இரண்டு தோல்விகளுக்கு பிறகு ஒரு ஆறுதல் வெற்றி. முதல் இரண்டு போட்டிகளின் தோல்வியை ஒப்பிடும் போது இது பெரிய வெற்றி இல்லை. எனினும் இந்திய அணிக்கு இந்த வெற்றியில் ஈஸ்வரனைப் போல் துணையிருந்து வெற்றியைத் தேடித் தந்தவர் ஒரு சாமானியர்.

இந்தியா அணி தொடர்ச்சியாக 5-வது தொடரை வென்றது  

2020-12-07 21:57:23

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக 5-வது தொடரை வென்றுள்ளது.

670 ரன்களுடன் கேஎல் ராகுலுக்கு ஆரஞ்சு தொப்பி - 30 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ரபாடாவுக்கு பர்பிள் தொப்பி  

2020-11-11 02:42:55

துபாய்:

ஐபிஎல் 13-வது சீசன் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற 60 ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன.

இந்த லீக் ஆட்டங்களில் அதிக ரன்கள் குவிக்கும் பேட்ஸ்மேனுக்கு ஆரஞ்சு தொப்பியும் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தும் பந்து வீச்சாளருக்கு பர்பிள் தொப்பியும் வழங்கப்படும்.

அதன்படி  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் 14 போட்டிகளில் ஒரு சதம் 5 அரைசதங்களுடன் 670 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார்.

17 போட்டிகளில் 30 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ரபாடா பர்பிள் தொப்பியை கைப்பற்றியுள்ளார்.

ஐபில் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை அணி வீரர் டிரெண்ட் போல்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.  

2020-11-11 02:33:34

துபாய்:

துபாயில் நடந்த ஐ.பி.எல். 2020 தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது

சாம்பியன் பட்டம் பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

ஐபில் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை அணி வீரர் டிரெண்ட் போல்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

IPL மும்பை இந்தியன்ஸ் வெற்றி  

2020-11-11 02:25:30

•     கோப்பையுடன் 20 கோடி இந்திய ரூபா பரிசுத்தொகை

துபாய்:

துபாயில் நடந்த ஐ.பி.எல். 2020 தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

வவுனியா மாவட்ட குத்து சண்டை வீரர்கள் கெளரவிப்பு..   

2020-10-17 19:21:26

வடமாகாண விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டை போட்டியில் வெற்றிபெற்ற வவுனியா மாவட்ட வீர வீராங்கனைகளுக்கான கெளரவிப்பு நிகழ்வு இன்று இடம்பெற்றது.

வடமாகாண ரீதியாக இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியில் பங்குபற்றி பதக்கங்களை வென்று சாதனைப்படைத்த வீர வீராங்கனைகள் இதன் போது கெளரவிக்கப்பட்டனர்.

விசாரணை நிறுத்தப்பட்டமை தவறு. பூரண விசாரணை வேண்டும் - மஹிந்தானந்த கோரிக்கை   

2020-07-04 10:42:07

2011 உலகக் கிண்ண போட்டிக் காட்டிக் கொடுப்பு தொடர்பான விசாரணையை நிறுத்த பொலிஸார் எடுத்த நடவடிக்கை மிகவும் பிழையான ஒன்றெனவும். இது தொடர்பில் மீள விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி யிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

திடீரென நிறுத்தப்பட்ட உலக கிண்ண கிரிக்கெட் ஆட்ட மோசடி விசாரணை  

2020-07-04 00:40:02

2011 ம் ஆண்டு இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆட்ட மோசடி இடம்பெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்த கருத்து தொடர்பாக  ஆரம்பிக்கப்பட்ட விசாரணை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

ஆட்ட நிர்ணய சதிக்கான ஆதாரங்கள் இல்லை - ICC தெரிவிப்பு  

2020-07-04 00:34:33

2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் தங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை என சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

எங்களை பற்றி பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் - மஹேல  

2020-07-04 00:31:02

011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய மோசடி இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அண்மையில் முன்வைத்த கருத்திற்கு அமைய  வாக்குமூலம் வழங்க New;று (03) வருகைத் தர வேண்டாம் என விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவிற்கு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் மஹேல New;று காலை விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட  விசாரணைப் பிரிவிற்கு  வருகை தந்திருந்தார். இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மஹேல குறித்த விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பையும்தருவதாகவும்குறிப்பிட்டிருந்தார்.

2011 உலகக்கோப்பை - மஹிந்தானந்த அலுத்கமகே. • உண்மையா? அரசியலா?   

2020-06-19 18:02:42

கொழும்பு :

 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணி மேட்ச் பிக்ஸிங் செய்து தோற்றதாக பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார் முன்னாள் இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே. இந்த குற்றச்சாட்டு கிரிக்கெட் உலகில் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது. அந்த இறுதிப் போட்டி நடைபெற்ற போது மஹிந்தானந்த அலுத்கமகே விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது