2020-07-23 00:20:46
-நக்கீரன்
கோலாலம்பூர்
பால்ய திருமணம் விதவைக் கோலம் சொத்துரிமை இல்லாமை உடன் கட்டை ஏறுதல் என்றெல்லாம் பெண்களுக்கு எதிராக ஏராளமான அநீதிகள் இழைக்கப்பட்டன. இவற்றின் உச்சம் பொட்டுக் கட்டுதல்.
ஆலயத்திலேயே தங்கி உண்டு உறங்கி இறை பணியுடன் பார்ப்பன அர்ச்சகர்களுக்காக வாழ்நாள் முழுவதும் ஊழியம் புரிவதற்காக பருவப் பெண்களை அனுப்பி வைக்கும் முறைக்குதான் பொட்டுக் கட்டுதல் என்று பெயர்.
தேவதாசி என்று அழைக்கப்பட்ட இப்பெண்கள் ஒரு முறை பொட்டு கட்டப்பட்டால் அதன் பின் பெற்றோர் உடன்பிறந்தோர் என அனைத்து உறவையும் துறந்துவிட வேண்டும். இதற்கு எதிராக யாரும் குரல் எழுப்பவோ மறுத்துப் பேசவோ ஆகாது.
20-ஆம் நூற்றாண்டின் மையப்பகுதிவரை தொடர்ந்த இந்த அநீதிக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்தான் டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார்.