Back to homepage

Latest News - SPECIAL FEATURES

சீனாவின் குறுநில அரசாக இலங்கை - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்  

2020-10-28 00:59:54

சீனாவிற்கும்  இலங்கைக்கும் இடையே அதிகரித்து வரும் ஒத்துழைப்பு என்பது இலங்கையை  சீனாவின் குறுநில அரசாகி ( ஏயளளயட ளுவயவந) விடும் ஆபத்து உள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எச்சரித்துள்ளது.

இந்திய விமானப்படையின் சாவகச்சேரி சந்தைப் படுகொலை - 33 ஆம் ஆண்டு நினைவு நாள்   

2020-10-28 00:42:44

சமாதானப் படை என்று இலங்கைக்குச் சென்ற இந்தியப் விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு எம்.ஐ-24 ரக உலங்குவானுர்திகள் சூரன் வீதியுலா வந்துகொண்டிருந்த மக்கள் மீது கண்முடித்தனமாக றொக்கற் தாக்குதலைமேற்கொண்டன. றொக்கட் குண்டுகளால் சந்தைப்பகுதியில் நின்றவர்கள் மற்றும் வீதியுலா வந்த மக்கள் 68 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

விடுதலைப் புலிகள்: 33 வருடங்களின் பின் பௌத்த பிக்குகள் கொலை வழக்கு - தமிழர்கள் படுகொலை விசாரணை எப்போது? - சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேல்  

2020-10-25 00:57:19

       ரஞ்சன் அருண் பிரசாத்

அம்பாறை - அரந்தலாவ பகுதியில் பிக்குகள் உள்ளிட்ட 33 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் 33 வருடங்களின் பின்னர் ஆரம்பித்துள்ளது.

அரந்தலாவ பகுதியில் 1987ஆம் ஆண்டு நடத்தப்பட்ட படுகொலை சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆரம்பித்து  இரு வாரங்களுக்குள் விசாரணை முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு  சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா  பதில் போலீஸ் மாஅதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துகொள்ளுமாறும்  சட்ட மாஅதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் இணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவிக்கின்றார்.

அத்துடன்  இந்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் விசாரணைகளை நடத்துமாறு  குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஜெனிவா ஐ.நா.மனித உரிமை சபையின் 46வது கூட்டத் தொடர் தமிழ் மக்களிற்கு சாதகமாக அமையும்ச. வி. கிருபாகரன் - பிரான்ஸ்  

2020-10-22 23:20:48

ச. வி. கிருபாகரன் -  பிரான்ஸ்

நியூயோர்க்சில் உள்ள ஐ.நா. பொதுச்சபையில்  கடந்த 13ம் திகதி  ஐ.நா.மனித உரிமை சபையின் 2021ம் ஆண்டு முதல் மூன்று வருடங்களிற்கு அங்கத்துவத்திற்கான பதினைந்து வெற்றிடங்களிற்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. இதன் அடிப்படையில் மனித உரிமைகளை மோசமாக மீறும் நாடுகள் சிலவும் வெற்றி பெற்றுள்ளனா.

விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் - போலீசார் வழக்குப்பதிவு  

2020-10-20 19:53:25

  • விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டதற்கு கண்டங்கள் வரும் நிலையில்  மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி  800  என்கிற படத்தை உருவாக்க திட்டமிட்டு இருந்தனர்.

இதில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலக வேண்டும் என அரசியல் தலைவர்களும்  சினிமா பிரபலங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். எதிர்ப்புகள் அதிகரித்ததால் இப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய் சேதுபதி நேற்று அறிவித்தார்.

அவர் நிரந்தரமானவர் அழிவதில்லை...எந்த நிலையிலும் அவர்க்கு மரணமில்லை  

2020-10-17 17:33:53

சீனப்போரை சித்தரித்து எடுக்கப்பட்ட ரத்தத்திலகம் படம். அதில் ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு... என்று தொடங்கும் பாடல். பாடலினூடே...

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்

அவர் மாண்டு விட்டால் அதை பாடி வைப்பேன்

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை

எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை

இந்த வரிகளைக் கேட்கும் போது எல்லோருக்குமே  மெய் சிலிர்க்கும்.

என்ன ஒரு கவிஞன்  இவ்வளவு கர்வமாகப்பாடுவானா  என்று கூட  சிலர் நினைத்திருக்கலாம். ஆனால் அவர் பாடியது நிஜம் என்பதை அவர் மறைந்து 39 ஆண்டுகள் கடந்தபிறகும் நிரூபித்து வருகிறார். அவர் தான் காலத்தை வென்ற கவியரசர் கண்ணதாசன்.

நவராத்திரி விரதம் இன்று ஆரம்பம்  

2020-10-17 16:34:13

ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக அன்னையை விரதம் இருந்து வழிபடக்கூடிய ஒரு விழாவாக  நவராத்திரி விழா இருப்பதே காரணம். புரட்டாசி மாத அமாவாசைக்குப் பின் வரும் பிரதமை திதியில் தொடங்கி ஒன்பது நாட்கள் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

விஜய் சேதுபதியை விமர்சிப்பவர்களுக்கு உங்களுக்கு வேறு வேலை இல்லையா? - நடிகை ராதிகா கேள்வி  

2020-10-17 13:39:01

•             ஏன் இவர்கள்  சன் ரைஸர்ஸ்  குழுவின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் முத்தையாவை நீக்கும்படி கோரவில்லை?

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக வலுத்து வரும் குரல்களுக்கு பிரபல தமிழ் திரைப்பட நடிகை ராதிகா சரத்குமார் எதிர்வினையாற்றியிருக்கிறார்.

கிழக்கின் கழுத்துகளுக்கு அருகில் காத்திருக்கின்றது கயிறு  

2020-10-17 00:36:15

கதிரோட்டம்

 

16-10-2020

 

 

கிழக்கின் கழுத்துகளுக்கு அருகில்  காத்திருக்கின்றது  கயிறு

 

இலங்கையின் வடக்கும் கிழக்கும் தமிழர்களின் பிரதேசம் என்ற  எக்காளத்தோடு வடக்கிலும் கிழக்கிலும் விடுதலைப் புலிகள் பெருமளவு நிலப்பரப்பை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரு ஆண்டுகள் பல.  அவை ஒரு பொற்காலமாக விளங்கின.

நான் தமிழர்களுக்கு எதிரானவன் அல்ல: முத்தையா முரளிதரன் விளக்கம்  

2020-10-16 23:41:35

•             இலங்கையில் தேயிலை தோட்ட கூலியாளர்களாக எங்கள் குடும்பம்

•             போரில் முதலில் பாதிக்கப்பட்டது இந்திய வம்சாவழியான மலையக     தமிழர்கள் தான்

•             போரில் நிகழும் இழப்பு அதனால் ஏற்படும் வலி என்ன என்பது எனக்கு தெரியும்.

•             நான் பேசிய சில கருத்துகள் தவறாக திரித்து சொல்லப்பட்டதால் வந்த விளைவு

•             எவ்வளவு விளக்கமளித்தாலும் எதிர்ப்பாளர்கள் யாரையும் சமாதானப்படுத்த முடியாது

•             தவறான செய்திகள் பகிரப்பட்டு வரும் நிலையில் நடுநிலையாளர்களுக்கும் பொது மக்களுக்கும் இந்த விளக்கத்தை  அளிக்கிறேன்

உலகத் தமிழர்களை அழைக்கின்றது எழுமின் வட அமெரிக்க மாநாடு  

2020-10-11 15:04:27

உலகில் மதிப்புறு மக்கள் இனமாக நாம் எழவேண்டுமென்ற வேட்கை நீறுபூத்த நெருப்பாக தமிழரிடையே இன்று இருக்கிறது.

தன்னெழுச்சியாகவும்  சிறு குழுக்களாகவும் நூற்றுக்கணக்கான முயற்சிகள் நடந்தேறியும் வருகின்றன.  The Rise - எழுமின் என்ற இயக்கம் இந்த வேட்கைக்கும்  தொடர் முயற்சிகளுக்கும்  புது விசையும் திசையும் தருகிறது. இரு ஆண்டுகளில் 20-க்கும் மேலான நாடுகளில் துளிர்த்துவிட்ட தன்னம்பிக்கையுடன் வேரோட்டம் தேடி முன்செல்கிறது The Rise – எழுமின்.

இந்தியாவின் கோரிக்கையை ஏற்குமா இலங்கை?  

2020-10-07 20:11:34

இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு அந்நாட்டு அரசு செவிசாய்க்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொண்டிருப்பது வரவேற்க வேண்டிய விஷயம். அதே நேரத்தில் இதனால் ஏதும் பலன் இருக்குமா என்பது சந்தேகமே.