Back to homepage

Latest News - world

உய்குர் முஸ்லிம்கள் விவகாரம்: கனாடாவுக்கு சீனா கண்டனம்  

2020-10-25 00:33:33

உய்குர் முஸ்லிம்கள் தொடர்பாக போலியான தகவல்களை கனடா கூறுவதாக சீனா குற்றம் சுமத்தி உள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில்

கனடா நாடாளுமன்றம் சீனாவின் ஸ்திரத்தன்மையை புறக்கணிக்கிறது. உய்குர் முஸ்லிம்கள் குறித்தும் சிறுபான்மையினர் குறித்து தவறான தகவல்களை கனடா நாடாளுமன்றம் பரப்புகிறது.

சீனாவின் உள்விகாரங்களில் கனடா தலையிடுகிறது. இது கனடாவின் அறியாமையை பிரதிப்பலிக்கிறது  என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா இன்னும் முழுமையாக போகவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும்: பிரதமர் மோடி உரை  

2020-10-20 20:10:03

•             பண்டிகை காலங்கள் வருவதால் மக்கள் விழிப்புடனும்  பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்துள்ளார்.

Pantin பள்ளிவாசலை மூடுவதற்கு உத்தரவு! - உள்துறை அமைச்சர்   

2020-10-20 19:16:38

பல்வேறு சர்ச்சைகளை கொண்ட Pantin   நகர பள்ளிவாசலை மூடுவதற்கு உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

 திங்கட்கிழமை மாலை செய்தி தொலைக்காட்சி ஒன்றிy;  தோன்றிய உள்துறை அமைச்சர்  Gérald Darmanin இது தொடர்பான தகவல்களை வெளியிட்டார்.

பேராசியர் Samuel Paty இற்கு தேசிய அஞ்சலி! - ஜனாதிபதி கலந்துகொள்கிறார்..!!   

2020-10-20 13:16:08

பேராசியர்  Samuel Paty  இன் தேசிய அஞ்சலி நிகழ்வில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கலந்துகொள்ள உள்ளார்.

புதன்கிழமை ( 21 ) அஞ்சலி நிகழ்வு இடம்பெறும் என நேற்று அறிவிக்கப்பட்ட து. ஆனால் இடம்பெறும் இடம் குறித்து குடும்பத்தினருடன் கலந்துரையாடிவிட்டு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தேசிய அஞ்சலி நிகழ்வு.  புதன்கிழமை மாலை 7 மணிக்கு பரிசின்  Sorbonne பல்கலைக்கழக முற்றத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முகமது நபியின் கேலிச்சித்திரம்: பிரான்ஸ் ஆசிரியர் கொலையில் 15 பேர் கைது   

2020-10-20 12:58:03

பிரான்சில் முகமது நபியின் கேலிச்சித்திரத்தை வகுப்பறையில் மாணவர்களிடம் காட்டியதால் ஆசிரியர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்து பொதுத்தேர்தல்: ஜெசிந்தா ஆர்டென் வெற்றி  

2020-10-19 20:00:35

நியூசிலாந்து பொதுத் தேர்தலில் ஜெசிந்தா ஆர்டென் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார்.

பிரான்சில் இஸ்லாமியவாதம் நிம்மதியாக உறங்காது! - ஜனாதிபதி   

2020-10-19 19:48:13

பேராசிரியர்  Samuel Paty  கொல்லப்பட்டதை அடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் பலர் அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொண்டனர். 

அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தால் அமெரிக்காவை விட்டு வெளியேறுவேன் - டிரம்ப்   

2020-10-18 18:31:08

வாஷிங்டன்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் இருந்து வருகிறார்.  அவரது பதவி காலம் வருகிற நவம்பருடன் முடிவடைகிறது.  இதனை முன்னிட்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 3ந்தேதி நடைபெற உள்ளது.  இதற்காக குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சியினரிடையே கடுமையான போட்டி ஏற்பட்டு உள்ளது. 

இரு கட்சியினரும் தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். இதில் ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தின் சென்னையை சேர்ந்த இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

ஜோ பிடனுக்கே மக்கள் ஆதரவு அதிகமாக இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியரின் தலை துண்டிப்பு: இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் என பிரான்ஸ் அதிபர் கண்டனம்  

2020-10-17 16:09:44

•             பிரான்சில் வகுப்பில் முகமது நபி குறித்து பாடம் நடத்திய ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்ட சம்பவத்திற்கு அந்நாட்டு அதிபர் மக்ரோன் லெபனான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாரீஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் புறநகர்ப் பகுதியில் உள்ள பள்ளி அருகே வரலாற்று ஆசிரியர் ஒருவர் முகமது நபியின் கேலிசித்திரங்கள் குறித்து பாடம் எடுத்தாக கூறி நேற்று மாலை 5 மணி அளவில் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதனால் மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மர்மநபரை சுட்டுக்கொன்றனர்.

ஆளில்லா தற்கொலைப்படை விமானங்களை சீனா தயாரித்து உள்ளது.   

2020-10-17 16:03:48

பீஜிங்

எதிரி நாடுகளுக்கு மரண பயத்தை காட்டும் புதிய ஆயுதம் ஒன்றை சீனா காணொளி வடிவில் வெளியிட்டு ள்ளது.

லாரி ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள அந்த ஆயுதமானது  ஆளில்லா குட்டி விமானங்களை ஏவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.அந்த வெடிகுண்டுகள் குட்டி விமானங்கள் போர்முனையில் எதிரி நாடுகளின் ராணுவ டாங்கிகள் அல்லது ராணுவ முகாம்கள் மீது  தாக்குதலை தொடுக்கும் என கூறப்படுகிறது. இந்த  ஆயுதத்தை ஹெலிகொப்டர் மூலம் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் .

கொரோனா பரவலால் எளிமையாக நடக்கிறது உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா.   

2020-10-17 14:03:23

•    உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தசரா விழா எளிமையாக கொண்டாடப் பட உள்ளது. விழாவை கொரோனா போராளியான டாக்டர் மஞ்சுநாத் தொடங்கி வைக்கிறார்.

மைசூரு

மைசூருவில் ஆண்டுதோறும் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

•    மைசூரு தசரா விழா

விஜயதசமியையொட்டி ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் இந்த விழா கர்நாடக மாநிலத்தின் பண்டிகையாக அரசால் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மைசூரு தசரா விழா கர்நாடகத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது.

மகிஷாசூரன் எனும் அரக்கனை மைசூருவின் காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மன் வெற்றி கொண்ட நாளைத்தான் மைசூரு தசரா விழாவாக மக்கள் கொண்டாடி வருவதாக சொல்லப்படுகிறது. முன்பு மகிஷாசூரனின் பெயரில் இருந்துதான் மகிசூர் என்று மைசூரு அழைக்கப்பட்டு வந்ததாகவும்இ தற்போது அந்த பெயர் மருவி மைசூரு என்று மாறியுள்ளதாகவும் வரலாறு கூறுகிறது.

கன்னியாகுமரி எம்.பி. தொகுதிக்கு பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல்  

2020-10-15 20:02:38

தமிழகத்தில் தற்போது 3 சட்டப்பேரவைத் தொகுதிகளும்  ஒரு எம்.பி. தொகுதியும் காலியாக உள்ளன.

திமுக எம்எல்ஏக்களாக இருந்த கே.பி.சாமி (திருவொற்றியூர்) இ காத்தவராயன் (குடியாத்தம்)  ஜெ. அன்பழகன் (சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி) ஆகியோரின் மறைவினால் மேற்குறிப்பிட்ட 3 தொகுதிகளும்  காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரின் மறைவினால் கன்னியாகுமரி நாடாளுமன்றத்தொகுதியும் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

(வசந்தகுமாரும்  ஜெ. அன்பழகனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்த மக்கள் பிரதிநிதிகள் என்பது குறிப்பிடத்தக்கது).