Back to homepage

Latest News - NORTHERN-EAST

சாய்ந்தமருதிற்கு வெளியூரிலிருந்து வருவோர் பதிவுசெய்யவேண்டும்.! - சுகாதார வைத்திய அதிகாரி அஜ்வத்தின் அறிவித்தல்.   

2020-10-28 00:11:34

வெளியூரிலிருந்து சாய்ந்தமருதிற்கு  வருகைதரும் எமதூர் பொதுமக்கள் தங்களது குடும்ப மற்றும் ஊர் நலன்கருதி தங்களை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகருக்கும் அத்துடன் பொலிஸ் நிலையத்திலும் அல்லது தங்களது பிரதேச கிராம சேவையாளரிடமோ உடனே பதிவு செய்யவும்.உள்ளுர் பொதுமக்களும் இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தகவல் வழங்கவும்.

இவ்வாறு  சாய்ந்தமருது சுகாதார வைத்தியஅதிகாரி டாக்டர்.எ.எல்.எம்.அஜ்வத்  பொதுவான அறிவித்தலை துண்டுப்பிரசுரம் மூலம்  வெளியிட்டுள்ளார்.

வவுனியாவில் வெளிமாவட்ட வியாபாரிகளிற்கு அனுமதி வழங்கவேண்டாம்!! தவிசாளர்  

2020-10-28 00:01:59

வவுனியா

கொரோனா வைரஸ் தாக்கம் பரவலடைந்துவரும் நிலையில் வெளிமாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வவுனியாவில் வியாபாரசெயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அரசு தடைவிதிக்கவேண்டும் என்று வவுனியா தெற்கு தமிழ்பிரதேசசபை தவிசாளர் து.நடராஜசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனாப்பீதியால் கல்முனையில் மக்கள் பொருட்கள்வாங்க முண்டியடிப்பு! -. கிழக்கில் இதுவரை 28பேருக்கு தொற்று  

2020-10-27 23:49:46

(

காரைதீவு  நிருபர் சகா)

கொரோனா மூன்றாவது அலை கிழக்கில் தனது தாக்குதலைத் தொடுத்திருக்கின்ற காரணத்தினால் மக்கள் ஒருவித பயபீதியிலுள்ளனர்.கிழக்கில் இதுவரை 28பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எந்தவேளையிலும் லொக்டவுண் செய்யப்படலாம் என்ற சிந்தனையில் மக்கள் தங்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்தினர்.

 

யாழ்ப்பாணம் மீன் வியாபாரிகள் அனைவருக்கும் பி.சீ.ஆர் பரிசோதனை!  

2020-10-27 23:30:20

யாழ். மாநகரசபை எல்லைப் பகுதிக்குள் உள்ள அனைத்து மீன் சந்தைகளிலும் விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகள் பி.சீ.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

காரைதீவு பிரதேசசபையில் வாணிவிழா!  

2020-10-25 00:38:34

இந்துக்களின் வாணிவிழா காரைதீவு பிரதேசசபையில் நேற்று தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பிரதமகுருவாக சிவஸ்ரீ ச.தியாகராசாக்குருக்க்கள் கிரியைகளை நடாத்தினார். சுகாதாரநடைமுறைகளுக்கிணங்க நடைபெற்ற வாணிவிழாவில் பிரதேசசபை உறுப்பினர்களான திருமதி எஸ்.ஜெயராணி எஸ்.சசிகுமார் கே.ஜெயதாசன் ஆகியோருட்பட சபை ஊழியர்கள் சிறப்பிப்பதையும் காணலாம்.

படங்கள் காரைதீவு சகா

கல்முனையில் கிராமிய வங்கி கடன் வழங்கும் நிகழ்வு!   

2020-10-23 23:36:00

(காரைதீவு  நிருபர் சகா)

கல்முனை வடக்கு ப.நோ.கூட்டுறவு சங்கத்தில் கூட்டுறவு கிராமிய வங்கி கடன் வழங்கும் நிகழ்வு சங்கத்தலைவர் எஸ். அரசரெத்தினம் தலைமையில் நேற்று  இடம்பெற்றது.

காரைதீவு வைத்தியசாலையில் சிரமதானம்  

2020-10-23 23:10:47

காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் நடராசா அருந்திரன் தலைமையில் வைத்தியசாலையில் கடமை புரியும் ஏனைய வைத்தியர்கள் மற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் பங்குபற்றிய சிரமதான நிகழ்வு நேற்று இடம்பெற்றது.நாட்டின் இன்றைய நிலைமைகருதி கொரோனா டெங்கு முதலான நோய்த்தொற்றிலிருநந்து பாதுகாக்குமுகமாக முன்னுதாரணமாக வைத்தியசாலையில் சிரமதானம் இடம்பெறுவதைக்காணலாம்.

படங்கள் காரைதீவு குறூப் நிருபர் சகா

கிழக்கு மாகாணசபை பேரவையில் வாணிவிழா!  

2020-10-23 23:03:46

இந்துக்களின் வாணிவிழா கிழக்கு மாகாணசபை பேரவைச்செயலகத்தில் பேரவைச்செயலாளர் கலாநிதி. எம்.கோபாலரெத்தினம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பிரதமஅதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.அஸங்கஅபேவர்த்தன கலந்துகொண்டு சிறப்பிப்பதையும் காணலாம்.

படங்கள் காரைதீவு  சகா)

வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாட்டம்!!  

2020-10-22 23:34:06

வவுனியா

20 வது அரசியலமைப்பு சீர்சிருத்தம் பெரும்பாண்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் 91 மேலதிக வாக்குகளை பெற்று பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இராணுவத்தின் ஏற்பாட்டில் கொரோனா டெங்கு அபாயத் தவிர்ப்பு பொதுக்கூட்டம். ஏற்பாட்டில் கொரோனா டெங்கு அபாயத் தவிர்ப்பு பொதுக்கூட்டம்.  

2020-10-22 23:29:32

காரைதீவு  நிருபர் சகா

இராணுவத்தின்  242 வது கட்டளை அதிகாரியின் ஏற்பாட்டிற்கிணங்க திருக்கோவில் பிரதேசத்தில் எதிர்வரும் காலங்களில் வெள்ள அபாயம் கோவிட்19 டெங்கு மலேரியா பரவல் தொடர்பான அபாயத்தினைக் குறைப்பது பற்றிய  பிரதேச மட்டக்கூட்டம் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று  இடம்பெற்றது.

7நாட்களாக கல்முனையில் வெள்ளைச்சீனிக்குத் தட்டுப்பாடு!  

2020-10-22 23:12:38

  • அரசு அறிவித்த விலைச்சலுகை இன்னும் மக்களை வந்தடையவில்லை!

 (காரைதீவு சகா)

அரசாங்கம் அறிவித்த சில உணவுப்பொருட்களுக்கான விலைச்சலுகை இன்னும் மக்களை வந்தடையவில்லையென குற்றம் சாட்டப்படுகின்றது.

விபத்தில் ஒருவர் படுகாயம்  

2020-10-20 18:37:10

வவுனியா

வவுனியா ஈரட்டை பகுதியில் இன்று (20)மதியம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதவாச்சியில் இருந்து வவுனியா நோக்கிப்பயணித்துகொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன் அதே திசையில் பயணித்த பிறிதொரு டிப்பர் வாகனம் பின்பக்கமாக மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.