Back to homepage

Latest News - COVID-19

கொரோனா இலங்கையில் சமூகப்பரவலாக மாறியுள்ள யாதார்த்தத்தை புரிந்து செயற்பட வேண்டும்.- விசேட வைத்திய நிபுணர்  

2021-01-23 00:23:50

கொரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறியுள்ளதை ஏற்றுக் கொண்டு யாதார்த்தத்தை புரிந்து அதற்கு முகங்கொடுக்க வேண்டும் என கேகாலை வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் முதித்த அபேகோன் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி போடுவதை தவிர்க்க வேண்டியவர்கள்?  

2021-01-20 15:54:24

ஐதராபாத் :

•    காய்ச்சல் உள்ளவர்கள்

•    கர்ப்பிணிகள் 

•    தாய்ப் பால் வழங்குவோர்

•    ரத்த போக்கு கோளாறுகள் உள்ளவர்கள்

தடுப்பூசி போடுவதை தவிர்க்கும்படி  அதைத் தயாரிக்கும் இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.

புதிய வகை கொரோனா வைரசிற்கு பைசர் தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கும் - ஆய்வில் தகவல்  

2021-01-08 17:35:03

லண்டன்

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. ஒரு ஆண்டை நெருங்கி வரும் நிலையிலும்  வைரஸ் தொற்றின் வீரியம் குறைந்தபாடில்லை.  உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.84 கோடியைக் கடந்துள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6.35 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

கொரோனாவுக்கு - சந்தைக்குவந்துள்ள போலி மருந்துகள்.  

2021-01-07 17:32:36

 *  பிரான்சுக்கு வந்த போலி கொரோனா தடுப்பு மருந்து..!!

கொரோனா வைரசுக்கு போலியான மருந்துகள் சந்தைக்குவந்துள்ளதாகஎச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

இந்த போலி மருந்துகள் இணையத்தளமூடாக விற்கப்படுவதாகவும்  இது தொடர்பான விசாரணைகளை சர்வதேச புலனாய்வுத்துறை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்  இந்த மருந்துகள்பிரான்சில்விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும்அறிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 200 யூரோக்கள் முதல் 1.000 வரை விற்பனை செய்யப்படுவதாகவும்  இவ்வகை மருந்துகள் அனைத்தும் போலியானவை எனவும்  எக்காரணங்கள் கொண்டும் அவற்றை வாங்க வேண்டாம் எனவும் பிரெஞ்சு அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

-              பரிஸ்தமிழ்

மேல் மாகாணத்தில் 10000கும் மேற்பட்ட ஆன்டிஜன் பரிசோதனைகள்  

2020-12-29 23:02:37

மேல் மாகாணத்திலிருந்து வெளியிடங்களுக்கு செல்வதற்கான 11 இடங்களில் மேற்கொள்ளப்படும் உடனடி ஆன்டிஜன் பரிசோதனைகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனா தொற்றாளர்களின் தொகை 40000 - உயிரிழப்பு 200ஐ நெருங்குகிறது  

2020-12-26 01:30:16

நாட்டில் மேலும் 592 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா ஒழிப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பைசர் கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பாக உள்ளது: சுவிட்சர்லாந்து அரசு  

2020-12-21 00:48:57

 பைசர்  கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானதாக உள்ளதாக  சுவிட்சர்லாந்து அரசின் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

வளர்ந்த நாடுகள் அதிக அளவிலான கொரோனா தடுப்பு மருந்தை வாங்கிவிட்டன: ஆம்னெஸ்டி  

2020-12-10 23:18:38

வளர்ந்த நாடுகள் அதிக அளவிலான கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்கி உள்ளன என்று ஆம்னெஸ்டி தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனாவிற்கு கைக்குழந்தை பலி  

2020-12-08 23:02:43

இலங்கையில் முதல் முறையாக கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி கைக்குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி கேட்டு சீரம் பாரத் பயோடெக் விண்ணப்பம்   

2020-12-08 17:37:56

புதுடில்லி:

 இந்தியாவில் அவசர பயன்பாட்டிற்கு கொரோனா தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கேட்டு சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன என மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் 90 வயது மூதாட்டிக்கு முதல் தடுப்பூசி  

2020-12-08 17:18:06

லண்டன்:

இங்கிலாந்தில் 90 வயதுள்ள மூதாட்டிக்கு  கொரோனா தடுப்பூசி முதலில் செலுத்தப்பட்டது.

தடுப்பு மருந்து சோதனையில் 40க்கும் மேற்பட்ட உலக நிறுவனங்கள் மூன்றாம் கட்ட சோதனை நிகழ்த்திவரும் இந்த நிலையில் பைசர் - பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து பெரும்பாலான நோயாளிகளை குணப்படுத்துவதாக விஞ்ஞானிகள் உறுதி அளித்தனர்.

ரஷியாவின் தடுப்பூசி ஸ்புட்னிக்-வி பயன்பாட்டுக்கு வந்தது!   

2020-12-07 23:18:17

2020-ம் ஆண்டு தொடக்கத்தில் தொடங்கி உலக நாடுகள் அனைத்தையும்  நிலை குலையச்செய்த கோவிட்-19 எனப்படும் கொரோனா பெருந்தொற்றுப் பரவலின் முடிவு அதே 2020 முடிவிலேயே தொடங்கலாம் என்ற நல்ல தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.