Back to homepage

Latest News - BUSINESS

நாணய - நிதியியல் துறைக் கொள்கைகள் பற்றிய அறிவித்தல்  

2020-12-29 22:57:14

வழிகாட்டல்: 2021ஆம் ஆண்டிற்கும் அதற்கும் அப்பாலுக்குமான நாணய மற்றும் நிதியியல் துறைக் கொள்கைகள்  இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மூலம் 2021 சனவரி 04ஆம் திகதியன்று அறிவிக்கப்படும்.

தற்போது நிலவுகின்ற கொவிட்-19 உலகளாவிய தொற்றுநோய் நிலைமையின் காரணமாக வழிகாட்டல் பற்றிய எடுத்துரைப்பு மெய்நிகராக இடம்பெறும் என்பதுடன் காணொளி 2021 சனவரி 04ஆம் திகதி திங்கட்கிழமை மு.ப 11.00 மணிக்கு இலங்கை மத்திய வங்கியின் வலைத்தளம் ஊடாகக் கிடைக்கப்பெறும்.

துருக்கிக்குக் கிடைத்த 99 டன் தங்கப் புதையல்   

2020-12-27 19:17:09

புதுடில்லி:துருக்கியில் மிகப் பெரிய தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு  உலகின் பல நாடுகளின்  மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட அதிகம் என்பது ஆச்சரியம்.

சீனா பொருளாதாரத்தில் விரைவில் அமெரிக்காவை முந்தும் இங்கிலாந்து ஆராய்ச்சி மையம் கணிப்பு.  

2020-12-27 19:03:15

லண்டன்

உலகளாவிய கொரோனா தொற்றுநோய்களின் போராட்டங்களுக்கு இடையில் அடுத்த தசாப்தத்தின் இறுதிக்குள் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக அமெரிக்காவை சீனா முறியடிக்கும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது

டொலரின் உயர்வு தேவையற்றது :ஏற்றுக்கொள்ள முடியாதது - இலங்கை மத்திய வங்கி  

2020-12-26 01:51:02

கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. இது தொடர்பாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு.

செலாவணி வீதத் தளம்பலின் அண்மைக்கால அதிகரிப்பு அடிப்படையற்றதும் ஏற்றுக்கொள்ளமுடியாததும் என மத்திய வங்கி கருதுகின்றது.

சீன நிறுவனங்களில் முதலீடு செய்யவேண்டாம்- அமெரிக்கா எச்சரிக்கை  

2020-12-07 21:51:36

வாஷிங்டன்:

 சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்ந்து மோதல்போக்கு நீடித்த வண்ணம் உள்ளது. இதனையடுத்து அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் நிறுவனங்களை அமெரிக்கா தடை செய்துவருகிறது. இந்நிலையில் நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் முதலீடு செய்யும் அமெரிக்க பங்குதாரர்கள் தற்போது சீன நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டு வருவதாகஅமெரிக்கமாகாணதுறைதெரிவித்துள்ளது.

போன் விளம்பர மோசடி - ரூ.217 கோடி அபராதம்  

2020-12-02 01:01:42

  • ஐபோன்கள் 30 நிமிடம் நீரில் மூழ்கினாலும் பாதிப்பு ஏற்படாது என விளம்பர மோசடி செய்த ஆப்பிள் நிறுவனத்திற்கு  ரூ.217 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

வெனிஸ்

அமெரிக்காவை தலைமையிடம் ஆக கொண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களை தயாரித்து வருகிறது.  அந்நிறுவனத்தின் தயாரிப்புகளான ஐபோன்கள் பற்றிய விளம்பரமொன்றில் 30 நிமிடங்கள் வரை நீருக்குள் மூழ்கினாலும் அவை பாதிக்கப்படாது என தெரிவித்து இருந்தது.

ஆனால் இத்தாலி நாட்டின் ஏ.ஜி.சி.எம். என்ற ஒழுங்குமுறை ஆணையம்  ஐபோன் பற்றிய தவறான விசயங்களை வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் அளித்துள்ளது என கூறி அதற்கு சுமார் ரூ.217 கோடி அபராதம் விதித்து உள்ளது.

அமீரகத்தின் தங்கம் கையிருப்பின் மதிப்பு 896 கோடி திர்ஹாமாக உயர்வு   

2020-11-22 00:30:06

  • அமீரக மத்திய வங்கியில் கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு 896.1 கோடி திர்ஹாமாக உயர்ந்துள்ளது.

அபுதாபி:

அமீரக மத்திய வங்கி சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் வாதரவத்தையில் மரநடுகை  

2020-11-17 16:18:46

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் வடமாகாண மரநடுகை மாதச் செயற்பாடுகளில் ஒன்றாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.11.2020) வாதரவத்தை வீரவாணியின் உள்ளக வீதிகளில் 100 இலுப்பை மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.

இந்திய கடல் உணவுப் பொருள் இறக்குமதிக்கு சீனா தடை   

2020-11-16 00:47:58

இந்திய கடல் உணவுப் பொருள்களின் இறக்குமதியை ஒரு வார காலத்துக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சீனா அறிவித்துள்ளது.

சுற்றுலாத் துறை பாதிப்பால் உலக பொருளாதாரத்தில் 2.8 சதவீத நஷ்டம்  

2020-11-13 22:04:47

ஐக்கிய நாடுகள் சபையின் அங்டாட் (ருNஊவுயுனு) நிறுவனம் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில்  சுற்றுலாத் துறை பாதிப்பால் உலக பொருளாதாரத்தில் ஆகக்கூடுதலாக 2.8 சதவீத நஷ்டம் ஏற்படலாமெனத் தெரியவந்துள்ளது.

சர்வதேச மட்டத்தில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை ஆகக்கூடுதலாக 78 சதவீதம் வரை குறைந்து சுற்றுலா ஏற்றுமதியில் ஒன்று தசம் இரண்டு ட்ரில்லியன் வரையிலான நஷ்டம் ஏற்படலாம் என்பதை புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டள்ளது.

குழந்தைக்கு பிராண்ட் பெயர் வைத்தால் 18 ஆண்டு வைபை இலவசம் - சுவிஸ் நிறுவனம் அறிவிப்புபிராண்ட் பெயர் வைத்தால் 18 ஆண்டு வைபை இலவசம் - சுவிஸ் நிறுவனம் அறிவிப்பு  

2020-10-19 19:41:33

•             எங்கள் பிராண்ட் பெயரை உங்கள் குழந்தைக்கு வைத்தால் 18 ஆண்டு வைபை இலவசம் என சுவிட்சர்லாந்து நிறுவனம் அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து:

இலவச வைஃபை பெற நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? உங்கள் குழந்தைக்கு எங்கள் நிறுவனத்தின் பெயரை வைத்தால் போதும் என சுவிட்சர்லாந்து நிறுவனம் விளம்பரம் செய்தது.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த ட்விஃபி என்ற நிறுவனம் தங்கள் பிராண்ட் பெயரை மக்களிடம் கொண்டு செல்ல வித்தியாசமான முறைவில் விளம்பரம் செய்தது.

கோவிட் காலத்தில் சிறு வியாபாரங்கள் வருமானம் ஆகியவற்றை வலுப்படுத்த - ஒன்றாரியோ மாகாண என் டி பி யின் திட்டம்   

2020-10-10 19:54:16

ஒன்றாரியோ மாகாணத்தில் தொழில் புரிவோருக்கு ஸ்திரமான வருமானமும் தொழில்களுமிருந்தால் தான் கோவிட் 19 இரண்டாம் அலையைச் சமாளிக்கவும் பொருளாதாரத்தை உயிர்ப்பிக்கவும் முடியும் என்ற நிலையில் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் அண்ட்ரியா ஹொர்வத்  மற்றும் டோலி பேகம் பாராளுமன்ற உறுப்பினர்  ஸ்காபரோ தென்மேற்கு ஆகியோர் புதிய திட்டமொன்றை வெளியிட்டுள்ளனர்.