Back to homepage

Latest News - LITERATURE

பல்துறை வித்தகர் சந்திரலிங்கம் கல்முனையின் அருஞ்சொத்து - பாராட்டுவிழாவில் சிறுகதைஎழுத்தாளர் சபா.சபேசன் புகழாரம்.  

2021-01-20 17:08:25

(வி.ரி.சகாதேவராஜா)

ஓய்வுநிலை அதிபரான  .சந்திரலிங்கம் இந்த மண்ணில் பல  வகிபாகங்கள வகித்துவருகிறார். கல்வியியலாளராக யோகா கலைநிபுணராக  கராட்டே வீரராக இலக்கியவாதியாக சமுகசேவையாளனாக எழுத்தாளராக திகழ்ந்துவருகிறார். அவருக்கான வித்தகர் விருது முற்றிலும் பொருத்தமானதே.அவர் மேலும் பல சாதனைகளைப்படைக்க வாழ்த்துகிறேன்.

மலேசிய டான்ஸ்ரீ சோமா அறவாரியத்தின் இலக்கியப் போட்டி   

2020-12-21 01:57:58

(மலேசிய மடல்)

-நக்கீரன்

கோலாலம்பூர்:

கொரோனா ஆட்கொல்லி கிருமியின் தாக்கம் இடம்பெற்றுள்ள இந்த வேளையிலும் தேசிய நிதி கூட்டுறவு சங்கம் நிறுவியுள்ள டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி-இலக்கிய அறிவாரியத்தின் தமிழ்ப் பணி தொய்வின்றி தொடர்கிறது.

ஞானம் மார்கழி இதழ் - இணையவழி கலந்துரையாடல்   

2020-12-15 01:57:41

இலங்கையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும்  ஞானம்  கலை இலக்கிய மாத இதழின் மார்கழி மாத இதழ் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு மேற்படி சஞ்சிகையின் வெளியீட்டாளர்   ஞானேஸ்வரன் அழைக்கின்றார்... உலகின் பல நாடுகளிலிருந்தும்இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்

கவிஞர் வை.கஜேந்தினின் சிறுவர் கவிதைநூல் வெளியீடு   

2020-12-15 00:55:13

(மன்னார் நிருபர்)

மன்னார் கவிஞர் வை.கஜேந்திரன் எழுதிய  வைரமுத்துக்கள் சிறுவர் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு   திங்கட்கிழமை(14) மாலை 3.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது.

கவிஞர் பூவை சரவணனின் கொவிட் 19 கவிதை நூல் வெளியீடு  

2020-12-01 01:24:30

காரைதீவு  நிருபர் சகா) 

கல்முனை கவிஞர் பூவை சரவணனின்  கவிதை தொகுப்பு கொவிட் -19 எனும் நூல் நேற்றுமுன்னதினம் கல்முனையில்  வெளியீட்டு வைக்கப்பட்டது.

தமிழ் இலக்கியத்திற்கு பெருமைசேர்த்தவர் முகில்வண்ணன். நூல்வெளியீட்டுநிகழ்வில் பிரதேசசெயலாளர் அதிசயராஜ்.  

2020-10-20 16:33:09

(காரைதீவு  சகா)

நாடறிந்த எழுத்தாளர் கலாபூசணம் வித்தகர் முகில்வண்ணன் தன்னுடைய எழுத்தால் தமிழ் இலக்கியத்திற்கு பெருமை சேர்த்தவர்.

இவ்வாறு  முகில்வண்ணன் – நினைவுநூல்  வெளியீட்டுநிகழ்வில் பிரதானஉரையாற்றிய கல்முனை வடக்கு பிரதேசசெயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தெரிவித்தார்.

முகில்வண்ணன் என்றொரு முதிசொம்.  

2020-10-17 18:41:39

நாடறிந்த எழுத்தாளர் கலாபூசணம் வித்தகர் என்றெல்லாம் எம்மத்தியில் பேசப்படும் முகில்வண்ணன் என்ற புனைபெயருடன் கடந்த 60வருடகாலமாக  ஈழத்து இலக்கியவானில் உலாவந்த திரு.வேலுப்பிள்ளை சண்முகநாதன் அவர்கள் இன்றில்லை.

மறைந்த பிரபலஎழுத்தாளர் முகில்வண்ணனுக்கு நினைவேந்தல் நடாத்த ஏற்பாடு.  

2020-09-22 18:54:38

(காரைதீவு   சகா)

அண்மையில் மறைந்த நாடறிந்த எழுத்தாளர்  முகில்வண்ணன்  என இலக்கியப்பெயரால் அழைக்கப்பட்ட பாண்டிருப்பைச்சேர்ந்த வே.சண்முகநாதனின் நினைவேந்தல் நிகழ்வை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.

கல்முனைநெற் இணையக்குழுமத்தின் ஸ்தாபகரான மறைந்த எழுத்தாளர் முகில்வண்ணனுக்கு அக்குழுமத்தினர் நினைவுமலரை வெளியிட்டும் நினைவேந்தலை நடாத்தவும் திட்டமிட்டுள்ளது.

.ஐயருக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் - பேராசிரியர் மௌனகுரு  

2020-08-26 17:06:45

       திரி எரிந்து ஒளி  தருவது போல ஐயர் தான் எரிந்து ஒளி தருகிறார்

ஐயரே  நீவிர்  நீடூழி  வாழ்க ஒளியாகப்  பயன்தருக  

இணையவழி பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கு   

2020-08-21 17:27:50

 (காரைதீவு  நிருபர் சகா)

 இந்தியா மற்றும் கனடா நாட்டின் பத்துக் கவிஞர்கள் இணையவெளியில் பங்கேற்கும் இணையவழி பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கு நாளை(22)சனிக்கிழமை நடைபெறுகிறது.

கொரோனா காரணமாக வான்வெளிப்பயணங்கள் தடைபட்டிருப்பதால் இணையவெளியில் இக்கவியரங்கை நடாத்த கனடா எழுத்தாளர் அகில் சாம்பசிவம் முயற்சியெடுத்துள்ளார்.

கனடாவில் வாழும் காரைதீவைச்சேர்ந்த பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம் தலைமையில் நடைபெறும் இக்கவியரங்கை இலக்கியவெளிகாலாண்டுஇலக்கியசஞ்சிகையும் தமிழ் ஆதர்ஸ்.கொம்மும் இணைந்து நடாத்துகிறது.

•       இந்திய இலங்கை நேரப்படி சனிக்கிழமை(22)  மாலை 7மணிக்கும்

•       கனடாவில் காலை 9.30மணிக்கும் இக்கவியரங்கை நெறிப்படுத்தும் கனடா எழுத்தாளர் அகில் சாம்பசிவத்தின் யுரியூப் முகநூல் சூம் வழிகளில் நேரலையாகப் பார்க்கமுடியும்.

சா.கந்தசாமி காலமானார்.  

2020-08-02 23:44:38

சாயாவனம் என்ற நாவல் மூலமாக நவீன தமிழ் இலக்கிய உலகுக்கு 1970-களில் அறிமுகமானவர் எழுத்தாளர் சா. கந்தசாமி.

சா. கந்தசாமி 1940-ம் ஆண்டில் தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்தார். சென்னையில் 1963-லிருந்து சில நண்பர்களுடன் சேர்ந்து இலக்கியம் சார்ந்த செயற்பாடுகளுடன் இயங்கினார். இதன் பேறாகவே  கசடறதபற  எனும் இதழ் உருவானது.

இவரது சுடுமண் சிலைகள் என்ற தமிழகப் பாரம்பரியக் கலைகள் பற்றிய குறும்படம் சர்வதேச விருது பெற்றது. சிற்பி தனபால்  ஜெயகாந்தன்  அசோகமித்திரன் போன் றோரின் வாழ்வும் பணியும் பற்றிய குறும்படங்களை எடுத்துள்ளார்.

இவரது நாவல்களில்  தொலைந்தவர்கள்  சாயாவனம்   விசாரணைக் கமிஷன் போன்றவற்றுக்குத் தனியான அடையாளம் உண்டு.   விசாரணைக் கமிஷன்  நாவலுக்கு   1998-ம் ஆண்டின் சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.

-    கருணாகரன்.

      முகநூல் பதிவு.

இலங்கையில் சிக்கியிருந்த 700 இந்தியர்களை அழைத்துசென்றது இந்திய கடற்படை கப்பல்   

2020-06-02 20:48:29

இலங்கையில் கடந்த மூன்று மாதகாலத்திற்கு அதிகமான காலம் தங்கியுள்ள இந்திய பிரஜைகளை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து செல்ல இந்தியா ஏற்பாடு செய்திருந்தது.

ஆதற்கமைய கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்த இந்திய கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் ஜலஷ்வா இன்று1 ஆம் திகதி கொழும்பில் இருந்து 700 இந்திய பிரஜைகளுடன் இந்தியா நோக்கி பயணமாகியது.