Back to homepage

Latest News - ART CULTURE / HISTORY

யாழ். மேயர் விடயம் - கூட்டமைப்பு க்குள் சர்ச்சை  

2021-01-02 00:30:41

யாழ். மாநகர மேயர் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட தோல்வியை அடுத்து தமிழரசு கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் மோதல் நிலை வலுப்பெற்றுள்ளது.

இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை சுமத்தி அறிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் சுமந்திரன் பகிரங்க கடிதம் ஒன்றை அனுப்பி மாவை சேனாதிராஜா மீது குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் : கருணை மனுவிற்கு ஆதரவுகோரி சர்வமத்தலைவர்களுடன் சந்திப்பு!  

2021-01-02 00:28:45

தமிழ் அரசியல் கைதிகளை கருணை அருப்படையிலாவது விடுவிக்குமாறு கோரும் கருணை மனுவிற்கு ஆதரவுகோரி யாழ் மாவட்டத்திலுள்ள சர்வமதத் தலைவர்களுடன் அரசியல் கைதிகளின் உறவுகள்  (டிச-31) வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

கொரோனா இந்துமத சிந்தனைக்கு உயிர்கொடுத்துள்ளது! - யாகத்தில் மேலதிகஅரசஅதிபர்.  

2020-12-30 23:12:39

வி.ரி.சகாதேவராஜா

இந்து மதத்தின் கோட்பாடான அனைத்து உயிர்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்ற உயரிய சிந்தனைக்கு உயிர் கொடுத்து மீண்டும் ஞாபகப்படுத்தியிருக்கின்றது கொரோனா வைரஸ்.

இவ்வாறு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் தெரிவித்தார்.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது - பந்துல  

2020-12-26 01:42:17

 

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நிலையில் அரசாங்கம் இல்லை என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ரொறன்ரோ தமிழ் இருக்கைக்கான நிதிசேர் நிகழ்ச்சி - இணையவழி ஊடாக பர்வின் சுல்தானா உரை  

2020-12-22 19:10:11

ரொறன்ரோ தமிழ் இருக்கைக்கான நிதிசேர் நிகழ்ச்சியாக முனைவர் பர்வின் சுல்தானா அவர்களின் சிறப்புரை இடம்பெறவுள்ளது.

உத்தரமேரூர் சோழர் காலக் கோயிலில் தங்கப் புதையல்   

2020-12-13 23:46:12

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள பழங்கால கொளம்பேஸ்வரர் கோயிலை இடித்தபோது  கருவறைக்கு அருகில் இருந்து பல்வேறு வடிவங்களில் தங்கம் கிடைத்திருக்கிறது.

ரஜினி கட்சிக்கு கொடி சின்னம் ரெடி  

2020-12-10 22:54:46

சென்னை :

ரஜினி புதிதாக ஆரம்பிக்க உள்ள கட்சிக்கு கொடி சின்னம் தயாராகி விட்டதாக மன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

கிழக்கில் தொற்று 223: கொரோனா எகிறுகிறது:நிலைமைகவலைக்கிடம்!  

2020-12-01 00:57:57

  • 5சிகிச்சைநிலையங்களில் 1214பேர்:9445பேருக்கு பிசிஆர் பரிசோதனை!

(காரைதீவு நிருபர் சகா)

கிழக்கு மாகாணத்தில் கொரோனாத்தொற்றுகளின் எண்ணிக்கை 223ஆக அதிகரித்துள்ளது. நாளுக்குநாள் அதிகரித்துச்செல்லும் கொரோனாவினால் கிழக்கின் நிலைமை மோசமாகிக்கொண்டுவருகிறது.

2000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பில் சிக்கி இறந்தவர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு  

2020-11-23 00:42:03

  • ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்கும் முயற்சியின்போது இறந்த இரண்டு நபர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இத்தாலி:

ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய ரோமப் பேரரசின் பாம்பீ நகரத்தை அழித்த  எரிமலைச் சீற்றத்தில் இறந்த  இரண்டு மனிதர்களின் உடல்களை இத்தாலியிலுள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பாகிஸ்தானில் சுமார் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த விஷ்ணு கோயில் கண்டுபிடிப்பு!  

2020-11-22 01:00:16

வடமேற்கு பாகிஸ்தானின் ஸ்வாத் மாவட்டத்தில்  சுமார் 1 300 ஆண்டுகள் பழமையான இந்து கோயிலை பாகிஸ்தான் மற்றும் இத்தாலி நாட்டை சேர்ந்த தொல்லியல்துறை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வாழ வேண்டியவர்களை கல்லறைகளாக்கி விட்டு மயானங்களை துப்பரவு செய்கின்றனர் - கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்  

2020-11-21 23:55:03

தமிழ் மக்கள் மத்தியில் வரவு செலவு திட்டம் தொடர்பாக வீணான வதந்திகளைப் பரப்பி சுயலாப அரசியல் நடத்தும் தரப்பினர்  வாழ வேண்டியவர்களை கல்லறைகளாக்கி விட்டு தற்போது மயானங்களை துப்பரவாக்குகின்றார்களே தவிர மக்களின் துயரங்களை துப்பரவு செய்ய தயாரில்லை . இவ்வாறானவர்களை எந்தக் கல்லறைகளும் ஏற்றுக்கொள்ளாது  என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்தார்

நடிகை குஷ்பு பயணித்த கார் மதுராந்தகம் அருகே விபத்து  

2020-11-18 13:09:40

சென்னை

பாஜகவைச் சேர்ந்த குஷ்பு தன்னுடைய காரில் வேல் யாத்திரைக்காக கடலூர் நோக்கி மதுராந்தகம் அருகே  சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னாy; சென்ற கண்டெய்னர் லாரி மீது குஷ்பு சென்ற கார் திடீரென மோதியது. இதில் காரின் பின்பக்க கதவு மட்டும் சேதம் அடைந்துள்ளதாகவும்  குஷ்புக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.