ஜெமினி -100
சிவா பரமேஸ்வரன் மூத்த செய்தியாளர்
அவர் நடந்த தடங்களில் நானும் நடந்துள்ளேன். அது பெரிய விஷயம் இல்லையென்றாலும் மனதளவில் சிறிய மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர் உலகமெங்கும் தமிழ் சினிமா ரசிகர்களால் அறியப்படும் மனிதர். தனக்கென்று தனி பாணியை வகுத்துக் கொண்டு அதில் வெற்றிகரமாப் பயணித்தவர். நான் அப்போது மாணவர்.
எங்கள் இருவருக்குமான அந்த தொடர்புப் பாலம் சென்னை கிறிஸ்தவக் கல்லூரி. அவர் அங்கு இரசாயனத்துறையில் குறுகிய காலம் விரிவுரையாளராக இருந்தார். நான் பௌதிகத்துறையில் மாணவராக இருந்தேன். இவ்விரு துறைகளும் ஒரே கட்டடத்தில் மேலும் கீழுமாக இருந்தன.
சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் அவர் குறுகிய காலமே விரிவுரையாளராக இருந்தாலும் அந்தப் பசுமைச் சூழலின் தாக்கம் தனது படங்களில் இருந்துள்ளது என்று அவர் கூறக் கேட்டுள்ளேன்.