மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் 15-ஆவது தலைவர் முனைவர் மணிமாறன் சுப்பிரமணியன்
-நக்கீரன்
கோலாலம்பூர்
மலேசியா மலேசியாவை அடுத்துள்ள் சிங்கப்பூர் நாடுகளைக் கடந்து தமிழினத்தின் தொப்புள்கொடி உறவுகள் படர்ந்துள்ள நாடுகள் எங்கெங்கும் தமிழியக் கூறுகளையும் விழுமியங்களையும் வளர்த்தெடுக்க வேண்டிய கடப்பாட்டை மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை கொண்டுள்ளது என்று அதன் புதிய தலைவர் சு. மணிமாறன் தெரிவித்துள்ளார்.